கருணாநிதி உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சீரடைந்தது: காவேரி மருத்துவமனை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கருணாநிதி உடல் நிலை பற்றி காவேரி மருத்துவமனை அறிக்கை- வீடியோ

    சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டு மீண்டும் சீரடைந்ததாக காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

    திமுக தலைவர் கருணாநிதி ரத்த அழுத்த குறைபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கருணாநிதி, சென்னை ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நள்ளிரவிலேயே கருணாநிதி ரத்த அழுத்தம் சரியாகிவிட்டது, என்று காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டிருந்தது.

    Kauvery hospital to release health bulletinon Karunanidhi in night

    நேற்று இரவு காவிரி மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதி உடல் நிலை சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், காவிரி அறிக்கை வெளியாகி, 24 மணி நேரம் ஆகிவிட்டதால், இன்று இரவு அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

    எனவே கருணாநிதி உடல்நிலையை அறிந்து கொள்ள திமுக தொண்டர்கள் காவிரி மருத்துவமனையை சுற்றிலும் குவிந்துள்ளனர்.

    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள் இன்று இரவு, கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்து சென்றனர்.

    இந்த நிலையில் இரவு 9.45 மணிக்கு வெளியான அறிக்கையில், கருணாநிதி உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவ உபகரணங்கள் உதவியோடு மீண்டும் உடல்நிலை சரி செய்யப்பட்டது. மருத்துவ நிபுணர்கள் உதவியோடு சிகிச்சை தொடர்ந்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி ஒரு பிறவி போராளி என்பதால் அவர் உடல் நலிவையும் எதிர்த்து போராடி வருகிறார் என்று திமுக தொண்டர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+