தண்ணீரில் தத்தளிக்கும் "கடவுளின் தேசம்" மீண்டு வர கை கொடுங்கள்
Recommended Video

சென்னை:
அன்பார்ந்த வாசகர்களே
கடவுளின் தேசம் என்று செல்லமாக அழைக்கப்படும் கேரளாவின் தற்போதைய துயர நிலையை அனைவரும் அறிவீர்கள். பொருட் சேதம், உயிர்ச்சேதம் என மிகப் பெரிய சோகத்தில் மூழ்கியுள்ளது கேரளா. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதுவரை 70க்கும் மேற்பட்டோரின் உயிரை இந்த வெள்ளம் பறித்துள்ளது. கேரள அரசு 17,974 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு இடம் மாற்றியுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் 117 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நெருக்கடியான நேரத்தில், கேரளத்தில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் தங்களது வாழ்வாதாரத்தை திரும்பப் பெற நாம் கை கொடுக்க வேண்டியது அவசியமாகும், மனிதாபிமானக் கடமையுமாகும். வரலாறு காணாத இயற்கை பேரிடரில் சிக்கியுள்ள கேரளாவுக்கு உதவிக் கரம் நீட்ட வேண்டியது முக்கியமானதாகும்.
வெள்ளத்தால் 10,000 கிலோமீட்டர் அளவிலான சாலைகள் சேதமடைந்துள்ளன. 20,000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. பொதுச் சொத்துக்களின் சேதம் ரூ. 8351 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை மீட்க அனைவரும் உதவ வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Here's how you can help those affected by the unprecedented floods in Kerala. Now you can make donations online to Chief Minister's Distress Relief Fund through the site, https://t.co/OFHTHlZ9by #KeralaFloods #StandWithKerala. pic.twitter.com/XNlBKqdCUT
— CMO Kerala (@CMOKerala) August 14, 2018
அன்பு வாசகர்களுக்கு நமது வேண்டுகோள்: கேரள மக்களுக்கு தாராளமாக உதவுங்கள். உதவிக் கரம் நீட்டுங்கள். நிவாரண உதவிகளை தாயுள்ளத்தோடு வழங்குங்கள்.
முதலமைச்சரின் நிவாரண நிதி விவரங்கள் கீழே உள்ளது
Name of Donee: CMDRF
Account number : 67319948232
Bank: State Bank of India
Branch: City branch, Thiruvananthapuram
IFSC: SBIN0070028
PAN detail: AAAGD0584M
SWIFT CODE: SBININBBT08












Click it and Unblock the Notifications