தமிழர்களை கடித்து குதற கேரள தெரு நாய்கள் 'இறக்குமதி'! மருத்துவ கழிவுகள் வரிசையில் இப்போது நாய்கள்
கோவை: தெருநாய்களை கொல்ல வேண்டும் என்ற கோரிக்கையும், கொல்லக்கூடாது என்ற எதிர்ப்பும் கேரளாவில் கலந்து ஒலிக்கிறது. எனவே, தெருநாய்களை, பிடித்து கோவையிலுள்ள ஒரு அமைப்புக்கு, கேரளாவின் நாய்கள் ஒழிப்பு அமைப்பு நாய்களை அனுப்பி வைக்கும் தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
கேரளாவில், மக்களை கடித்து குதறும், தெருநாய்களை கொல்ல வேண்டும் என்று ஒரு குரூப்பும், கொல்லக்கூடாது என்று மற்றொரு குரூப்பும், 'முண்டுவை' மடித்துக் கட்டி மோதிக்கொண்டுள்ளன.

நாயை கொன்றால் பணம்
இந்நிலையில், கேரளாவை சேர்ந்த 'தெருவு நாய உன்மூலனா சங்கம் (தெரு நாய் ஒழிப்பு சங்கம்)' ஒரு நூதன அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, யாராவது தெரு நாயை கொன்றால், ஒரு நாய்க்கு ரூ.500 என்ற வீதத்தில், ரொக்கப் பரிசு தரப்படும் என்று அந்த அமைப்பு அறிவித்தது.

நன்கொடை
இந்த அறிவிப்புக்கு, பிராணி வதை எதிர்ப்பு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், அவ்வமைப்பின் தலைவரை போலீசார் கைது செய்தனர். இந்த சர்ச்சை அடங்கும் முன்பாக, வீ-காட், வொன்டர்லா போன்ற நிறுவனங்களின் தலைவரான தொழிலதிபர், கொச்சோசப் சிட்டிலப்பிள்ளி, சர்ச்சைக்குறிய நாய் ஒழிப்பு அமைப்புக்கு ரூ.5 லட்சத்தை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

கோவைக்கு வருது
நாயை கொல்வோருக்கு, ரொக்கப் பரிசு வழக்குவதாக அறிவித்த நிறுவனத்திற்கு, தொழிலதிபர் வழங்கிய ரொக்கப்பரிசு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சிட்டிலப்பிள்ளி அளித்த பேட்டியில், "நாய்களை கொல்வதை ஊக்குவிக்க நான் நிதி உதவி செய்யவில்லை. கோவையிலுள்ள ஒரு நிறுவனத்துக்கு, தெரு நாய்கள் அனுப்பப்படுகின்றன. அந்த நிறுவனம் தெருநாய்களை தத்து எடுக்க உள்ளது.

கழிவுகள்
கேரளாவில் தெரு நாய் கடி சம்பவங்கள் குறைந்துள்ளதற்கு, இந்த அமைப்பு முக்கிய காரணம். எனவே அவர்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம்" என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருந்து காய்கறி, மாடுகள், அரிசி போன்றவை கேரளாவுக்கு கன ஜோராக செல்கின்றன. ஆனால் அங்கிருந்து தமிழகம் வருவது என்னவோ, மருத்துவ கழிவுகள், குப்பைகள்தான்.

கடிக்கு ரெடியா
இந்த வரிசையில் இப்போது தெரு நாய்களையும் சேர்த்துள்ளனர் மலையாளிகள். ஆக, தமிழ்நாடு அவர்கள் பார்வையில் எப்போதுமே ஒரு குப்பை கொட்டும் இடமாகத்தான் இருக்கப்போகிறது. கேரள அரசின் அறிக்கைப்படி, ஆண்டுக்கு சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம்பேர் தெருநாய்க்கடியால் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வெறிபிடித்த நாய்கள்தான், தமிழர்களை கடித்து குதற களமிறக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications