காங்கிரஸ் கட்சியில் குஷ்புவுக்கு சீட் இல்லை!
சென்னை: திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடுவே சட்டசபை தேர்தலில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் மயிலாப்பூர் தொகுதியில் குஷ்பு சீட் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு சீட் தரப்படவில்லை.
தமிழக சட்டசபைக்கு தேர்தல் மே 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தமிழக அரசியல் களம் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வுகளை முடித்த கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில், கோபி தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு களமிறக்கப்படலாம் என்ற செய்தி உலாவியது.
இதனிடையே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் 33 பேர் கொண்ட முதற் கட்ட வேட்பாளர் பட்டியல் சென்ற வாரம் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் குஷ்புவின் பெயர் இடம்பெறவில்லை.
இதையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குஷ்புவை வேட்பாளராக அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு, "கட்சி மேலிடம் விரும்பினால் தான் ஆர்.கே.நகரில் போட்டியிட தயார்" எனக் கூறியிருந்தார்.
ஆர்.கே. நகரில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதால் அந்த தொகுதியை விட்டுகொடுக்க மறுத்துவிட்டது திமுக தலைமை. இதனால் குஷ்புவுக்கு மயிலாப்பூரில் சீட் தரப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில் காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதிலும் குஷ்புவின் பெயர் இடம்பெறவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications