For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக முகாமிலிருந்து நகரும் குஷ்பு… தேசிய கட்சியில் இணைய முடிவு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் உள்ள குஷ்பு, திமுக முகாமில் இருந்து விலக முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை குஷ்பு திமுகவின் நட்சத்திர பிரச்சார பேச்சாளர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

தென்சென்னை லோக்சபா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் குஷ்பு. ஆனால் ஸ்டாலின் லாபியின் அது கிடைக்காமல் போய்விட்டது.

பிரச்சாரத்திற்கு தயாரான குஷ்பு

பிரச்சாரத்திற்கு தயாரான குஷ்பு

போட்டியிட சீட் கிடைக்காத வருத்தத்தில் இருந்தாலும், பிரச்சாரம் செய்ய தயாராகவே இருந்தார் குஷ்பு.

அழைக்கவே இல்லையே

அழைக்கவே இல்லையே

ஏப்ரல் முதல்வாரத்தில் இருந்து பிரச்சாரத்திற்கு தயாராக இருப்பதாக குஷ்புவே பேட்டி கொடுத்தார். அப்படியிருந்தும் திமுக தரப்பில் இருந்து பிரச்சாரத்திற்கு அழைப்பு எதுவும் வரவே இல்லையாம்.

ஓரங்கட்டிடுவாங்களோ?

ஓரங்கட்டிடுவாங்களோ?

இனியும் இங்கிருந்தால் ஓரங்கட்டிவிடுவார்கள் என்று நினைத்த குஷ்பு டெல்லியில் கடந்த சிலநாட்களாக முகாமிட்டுருக்கிறார்.

புதிய பாதையை நோக்கி

புதிய பாதையை நோக்கி

தனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்துவிடுவார்கள் என்று நினைத்த குஷ்பு, புதிய அரசியல் பாதையைத் தேடி, டெல்லியில் முகாமிட்டுள்ளாராம்.

பாஜக அல்லது ஆம் ஆத்மி கட்சி

பாஜக அல்லது ஆம் ஆத்மி கட்சி

அநேகமாக பாஜக, அல்லது ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து எம்.பி சீட்டோடுதான் சென்னை திரும்புவார் குஷ்பு என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தமிழக அரசியலை தாக்குமா?

தமிழக அரசியலை தாக்குமா?

டெல்லி முகாம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நேரம் வரும் போது பேசுகிறேன் என்று மட்டும் கூறி வருகிறார். 2010ல் திமுகவில் இணைந்த குஷ்பு நான்கு ஆண்டுகளில் வேறு முகாமிற்கு போவாரா? அல்லது திமுகவிலேயே தனக்கென ஒரு இடத்தை தக்கவைப்பாரா? என்பது சில தினங்களில் தெரியவரும்.

English summary
Actress Khushboo will soon be joining the BJP or AAP sources close to her said on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X