நக்மாவுடனான மோதல் உக்கிரம்- ராகுலை சந்திக்கவிடாமல் தடுத்ததாக குஷ்பு கடும் அதிருப்தி!
சென்னை வந்த ராகுல் காந்தியை சந்தித்து பேசவிடாமல் தடுத்துவிட்டதாக நக்மா மீது குஷ்பு கடும் அதிருப்தியில் இருக்கிறாராம்.
சென்னை: காங்கிரஸ் கட்சியின் பெண் நிர்வாகிகள் அனைவரும் அடிதடிமுடிவோடுதான் களத்தில் இருக்கிறார்கள். இப்போது நடிகைகள் நக்மாவுக்கும் குஷ்புவுக்குமான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முகவரியாக இருப்பதே கோஷ்டி மோதல்கள்தான். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜான்சி, ஹசீனா கோஷ்டியினர் தலைமுடியை பிடித்து இழுத்து, ஆபாசமாக திட்டி, உதைத்து ஒரே ரணகளமாகிப் போனது சத்தியமூர்த்தி பவன்.

இந்த நிலையில் குஷ்புவுக்கும் நக்மாவுக்கும் இடையேயான பகிரங்க மோதல் இப்போது வெடித்து வீதிக்கு வந்துள்ளது. சென்னை வந்த காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச நடிகை குஷ்பு முயற்சித்திருக்கிறார்.
ஆனால் குஷ்புவின் முயற்சிக்கு எந்த பலனும் இல்லை. நடிகை நக்மாதான் திருநாவுக்கரசர் மூலமாக தம்மை சந்திக்கவிடாமல் சதி செய்துவிட்டதாக கடும் கோபத்தில் இருக்கிறாராம் குஷ்பு.
அண்மைக்காலமாக ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக இருப்பதாலேயே திருநாவுக்கரசரும் நக்மாவும் கை கோர்த்து தமக்கு எதிராக செயல்படுகிறார்கள் என குமுறுகிறாராம் குஷ்பு. இப்படியே ஓரம்கட்டி வைத்தால் எப்படி கட்சியில் நீடிக்க முடியும் என கடும் அதிருப்தியையும் குஷ்பு வெளிப்படுத்தி வருகிறாராம்.
அடுத்த பஞ்சாயத்து ரெடி!
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications