அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட கைக்குழந்தை மீட்பு.. பெண் கைது
சேலம் மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை பாலக்கோட்டில் மீட்கப்பட்டது
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை தர்மபுரி பாலக்கோட்டில் மீட்கப்பட்டது. கடந்திய பெண் வெண்ணிலா கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் நீர்முள்ளிக்குட்டையை அடுத்த ராஜாபட்டினத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். லாரி டிரைவரான இவருக்கு இந்து என்ற மனைவி உள்ளார். கர்ப்பவதியான இவரை பிரசவத்திற்காக கடந்த 24ம் தேதி சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்தக் குழந்தை திடீரென கடந்த 26ம் தேதி பிரசவ வார்டில் இருந்து மாயமானது.

பிறந்த பச்சிளம் குழந்தை காணாமல் போனதையடுத்து, அதிர்ச்சியடைந்த பெற்றோரும், உறவினர்களும், குழந்தையை மீட்டுத்தரக் கோரி போராட்டங்களை நடத்தினார்கள். மேலும், போலீசாரிடம் தந்தை வெங்கடேஷ் புகார் ஒன்றையும் அளித்தார்.
இதனையடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிரசவ வார்டுக்குள் நுழைந்து குழந்தையை கடத்திச் சென்றது சிசிடிவி கேமராக்களில் பதிவாகியது தெரிய வந்தது. அடையாளம் தெரியாத அந்தப் பெண்ணை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், குழந்தை கடத்தப்பட்ட 4 நாட்களுக்கு பிறகு தர்மபுரி அருகே பாலக்கோட்டில் குழந்தையை மீட்டனர். குழந்தையை கடத்திய வெண்ணிலா என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications