கடத்தப்பட்ட அமைச்சர் ராதாகிருஷ்ணன் உதவியாளர் மீட்பு...மர்ம கும்பல் தப்பியோட்டம்!!
உடுமலை: உடுமலையில் கடத்தப்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்கப்பட்டுள்ளார். அவரை இன்று உடுமலை எம்எல்ஏ அலுவலகத்தில் வைத்து நான்கு பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக காரில் கடத்தியபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் இன்று காலை 11 மணியளவில் கடத்தப்பட்டார். திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் உடுமலைப்பேட்டை, அன்சாரி வீதியில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்தில் கர்ணன் இருந்தார்.

அப்போது, அங்கு காரில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அலுவலகத்திற்குள் நுழைந்து, வலுக்கட்டாயமாக கர்ணனை இழுத்துச்சென்று காரில் ஏற்றியது. அப்போது அதில் ஒருவர் அவரை தாக்கியதும் கேமராவில் பதிவாகி இருந்தது.
Recommended Video
எம்எல்ஏ அலுவகத்திற்குள் பட்டப்பகலில் நுழைந்து அவரது உதவியாளரை ஒரு கும்பல் கடத்திச் சென்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்த உடுமலை டி.எஸ்.பி.,ரவிக்குமார் அதிரடி விசாரணையில் இறங்கினார். இந்த நிலையில், தளி அருகே வாளவாடியில் கடத்தப்பட்ட கர்ணனை இறக்கிவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.
தகவல் அறிந்த காவல்துறையினர் கர்ணனை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தியவர்களையும் தேடும் பணியும் போலீசார் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications