தென்காசி மாவட்ட குழந்தைகளின் அசத்தலான கொரோனா விழிப்புணர்வு
தென்காசி: தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசைக்கு உட்பட்ட அய்யாபுரம் கிராமத்தின் குழந்தைகள் ஒன்று இணைந்து தனது பெற்றோர்கள் உதவியுடன் கொரோனாவுக்கான விழிப்புணர் ஒன்றை சிறப்பாக செய்துள்ளனர்.
கொரோனா வைரஸில் பாதிப்பு,உயிரிழப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவருகிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவுக்கு மருந்து கண்டறிய முடியாமல் லட்சக்கணக்கில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மற்றும் பலர்பல விதங்களில் மேற்கொண்டு வருகின்றன. ஊரடங்குக்கு ஒத்துழைப்பு தருதல், கிருமி நாசினி கொண்டு கைகளை கழுவுதல் என பல விஷயங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாக தமிழக அரசின் விழிப்புணர்வு வாசகமான விழித்திரு! விலகியிரு!! வீட்டிலிரு!!!

அந்த விழிப்புணர் வாசகத்தை அய்யாபுரத்தின் குழந்தைகள் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொண்டு தங்களின் வீட்டிலையே ஒரு காகிதத்தில் எழுதி தன் பெற்றோர் உதவியுடன் புகைப்படம் எடுத்து மக்களுக்கும் தன் சொந்த பந்தங்களுக்கும் வீட்டில் இருக்கும் அவசியத்தை விழிப்புணர்வாக ஏற்படுத்தினார். குழந்தைகளின் இந்த முயற்சியை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

இதில் பங்குபெற்ற குழந்தைகள் யுகன், யுவதி, முகி ஷிவானி, மாலினி, ஸ்ரீ கோகுல தர்ஷினி, வைஷாந்த், அக்ஷய மஹதி ஸ்ரீ, சக்தி பாலா, அம்ரித், ஷியாம் விக்னேஷ், ஸ்ரீ இவேஷினி, பவுனிகா ஸ்ரீ, இஷாலினி பாலா, அனாமிகா, அவினாஷ் மற்றும் வைணவி.
முன்னதாக அந்த பகுதி இளைஞர்கள் ஒன்று இணைந்து ஊரின் முகப்பின் சுவரில் விழிப்புணர்வு விளம்பரம் செய்தும் தடுப்புகள் அமைக்கப் பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெறுவதோடு டிரம்களில் தண்ணீர் மற்றும் சோப்புகள் வைக்கப்ப்பட்டு ஊருக்குள் செல்பவர்கள் தங்கள் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவி சுத்தம் செய்த பின் முகக்கவசம் அணிந்தே பிறகே ஊருக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
செய்தி மற்றும் புகைப்படம்: கார்த்திகேயன் நடராஜன்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications