சிறுமியை பலாத்காரம் செய்து, தாயை கொன்று, போலீசாரிடம் தப்பி.. கொடூர கொலையாளி தஷ்வந்த் டைரி
Recommended Video

சென்னை: போலீசாரிடமிருந்து தப்பியோடிய கொடூர கொலையாளி தஷ்வந்த் மும்பையில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாசினி என்ற சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இந்த கொடூரன், தனது தாயையும் கொலை செய்து கொள்ளையடித்தவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தஷ்வந்தை சென்னை அழைத்துவர தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக தனிப்படை ஒன்று மும்பை விரைந்துள்ளது. இதனிடையே, தஷ்வந்த் வழக்கு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

கொடூர கொலை
பிப்ரவரி 5ம் தேதி, சென்னை மவுலிவாக்கத்தில் 7 வயது சிறுமி ஹாசினி மாயமானார். பிப்ரவரி 8ம் தேதி ஹாசினியை பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக எரித்து கொன்ற குற்றச்சாட்டில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அதே மாதத்தில், தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த்
ஆனால், இதுதொடர்பான வழக்கில், செப்டம்பர் மாதம், தஷ்வந்த் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் செப்டம்பர் 13ம் தேதி தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கியது.

தாயை கொன்ற தஷ்வந்த்
செப்டம்பர் 14ம் தேதி, ஹாசினியின் பெற்றோரை மிரட்டியதாக தஷ்வந்த் மீது காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், டிசம்பர் 2ம் தேதி தனது தாயையே கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து தலைமறைவானார் தஷ்வந்த் .

தப்பிய கொலையாளி
தனிப்படை அமைத்து போலீசார் இந்த கொடூரனை தேடினர். டிசம்பர் 6ம் தேதி, தனிப்படை போலீசார் தஷ்வந்தை மும்பையில் கைது செய்தனர். டிசம்பர் 7ம் தேதி சென்னைக்கு அழைத்து வரும்போது மும்பையில், போலீசாரிடம் இருந்து தப்பினார் தஷ்வந்த்.

கை விலங்கில் துணி
டிசம்பர் 8ம் தேதி, மும்பை அந்தேரியில் பதுங்கியிருந்த தஷ்யந்த் மீண்டும் கைது செய்யப்பட்டார். கையில் மாட்டியிருந்த விலங்கின் மீது துணியை போட்டு மூடியபடி அவர் சுற்றி வந்துள்ளது தெரியவந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications