'யோவ் ராம்கோபால் வர்மா... எங்க வீரப்பன் வில்லனா?' - எகிறும் கேள்வி, பதறும் முத்துலட்சுமி!!
வீரப்பன் உயிரோடு இருந்த காலம்... சந்தன மரக் கடத்தல் வீரப்பன், கொள்ளையன் வீரப்பன், அவன் இவன்.. என்றெல்லாம் பிரபல பத்திரிகைகளே முன்பு எழுதி வந்தன.
இன்று வீரப்பன் இல்லை.
வீரப்பன் கேரள, கர்நாடக எல்லைச் சாமி... காவல் தெய்வம் என்று அந்தப் பகுதி மக்களே கொண்டாடுகிறார்கள். வீரப்பனுக்கு சிலைகள் வைக்கிறார்கள். சமாதியில் வழிபாடு நடத்துகிறார்கள். பல கட்சிகள் அவரை தமிழ் தேசியவாதி என போற்றுகின்றன. தமிழ் தேசியத் தலைவர்களில் வீரப்பனும் ஒருவர் என்கிறது நாம் தமிழர் கட்சி.

மீடியா இப்போது அவர், இவர் என மரியாதையுடன் விளிக்க ஆரம்பித்துவிட்டது வீரப்பனை. அவரை இப்போது பெரும்பாலானோர் நாயகனாகப் பார்க்கும் சூழலில், மோசமான வில்லனாகச் சித்தரிக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் கான்ட்ராவர்சியைத் தேடித் தேடி பப்ளிசிட்டி பார்க்கும் ராம்கோபால் வர்மா.
கில்லிங் வீரப்பன் என்ற பெயரில் அவர் இப்போது எடுத்துவருவது வீரப்பனின் கதைதான். அதுவும் வீரப்பன் மனைவி முத்துலட்சுமியிடம் நேரடியாகப் பேசி, வாழ்க்கைக் கதை, சம்பவங்களை வைத்தே படமெடுக்கிறார். ஆனால் எடுக்கும் கோணம் வில்லத்தனமானது.
கன்னட நடிகர் மறைந்த ராஜ்குமாரை வீரப்பன் கடத்திப் போனது, அதன்பிறகு அவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றது போன்றவைதான் இந்தப் படத்தின் திரைக்கதைக்கு முதுகெலும்பு.
ஆனால் இந்த சம்பவங்களை மகா வில்லத்தனமாக சித்தரிக்கிறதாம் திரைக்கதை. வீரப்பனை மிக மோசமாக வார்த்தைகளில் திட்டும் காட்சிகளும் படத்தில் உண்டாம்.
இதனால்தான் இந்தப் படத்தை தமிழில் எடுக்கக் கூடாது என முடிவு செய்து, கன்னடம் மற்றும் தெலுங்கில் மட்டும் எடுக்கிறாராம் ராம்கோபால் வர்மா.
படத்தின் ஷூட்டிங் தொடங்கிய பிறகு, இந்த எதிர்மறை விஷயங்கள் அனைத்தும் வெளிவர ஆரம்பித்துள்ளதால், வீரப்பனை ஆதரிக்கும் அமைப்புகள் கடும் கோபத்தில் உள்ளன. இந்தப் படம் எப்படி வெளியாகிறது என்று பார்த்துவிடுகிறோம் என தடை கேட்கவும் தயாராகி வருகின்றன.
'யோவ் மென்டல் ராம்கோபால் வர்மா, எங்க காவல் தெய்வம் வீரப்பனை கேவலமாக சித்தரித்து ஒரே ஒரு காட்சி இருந்தாலும் நீ தீர்ந்த...' என்ற ரீதியில் ராம்கோபால் வர்மாவுக்கு கண்டனங்கள் பறக்க ஆரம்பித்துள்ளன. இந்தப் படத்தை எடுக்க எழுத்துப் பூர்வ அனுமதி அளித்துள்ள வீரப்பன் மனைவி முத்துலட்சுமிக்கும் சேர்த்தே கண்டனங்கள் வர ஆரம்பித்துள்ளது, அவரை அதிர வைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, படத்தில் தன் கணவன் வீரப்பனுக்கு எதிராக ஏதேனும் காட்சிகள் இருந்தால், அதனை எதிர்த்து தடை கேட்கும் முதல் நபர் நானாகத்தான் இருப்பேன் என முத்துலட்சுமி கூறியுள்ளார்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications