உள்ளாட்சி தேர்தல்: திமுக கூட்டணியில் இணைந்தது கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி!
சென்னை: சட்டமன்றத் தேர்தலில் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த ஈ.ஆர் ஈஸ்வரன் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை திமுக கூட்டணியுடன் இணைந்து சந்திக்கிறது.
வரும் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சட்டமன்றத் தேர்தலின் போது இருந்த கூட்டணியோடு திமுக வார்டுகளை பிரித்துக் கொண்டாலும் கடலூரில் விடுதலை சிறுத்தைகளுடன் வார்டுகளை பிரித்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

இதேபோல், சட்டமன்றத் தேர்தலின் போது மிக கடுமையாக திமுகவையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் விமர்சனம் செய்து வந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தற்போது திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளத.
முன்னதாக, சென்ற மாதம் 21ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் சந்தித்து கூட்டணி பற்றி பேசிவிட்டு சென்றார்.
இதனையடுத்து, நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார் ஈஸ்வரன். இந்த பேச்சுவார்த்தையின் போது உள்ளாட்சி தேர்தலில் வார்டுகளை பகிர்ந்து கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக ஈஸ்வரன் தெரிவித்தார்.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications