17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது கொடைக்கானல் நட்சத்திர ஏரி.. உடையும் அபாயம்!
கொடைக்கானல் நட்சத்திர ஏரி நிரம்பி வழிவதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேஆர்பி அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்படுவதால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கொடைக்கானல்: கொடைக்கானல் நட்சத்திர ஏரி நாளை காலை திறக்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஏரிக்கரையோரம் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி, தொடர் கனமழையால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பி வழிகிறது. நிரம்பி வழியும் ஏரி நீர் கொடைக்கானல் அன்னை தெரசா நகரில் நீர் வீழ்ச்சியாக கொட்டும் காட்சி சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏரி திறக்கப்படுவதால் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால் சேலம் - ஏற்காடு மலைப்பாதையில் திடீர் அருவிகள் தோன்றி சுற்றுலாப் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை கொட்டித் தீர்த்தது.
சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஏற்காடு மலைப்பாதையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் நீர் வீழ்ச்சிகள் தோன்றின. ஏற்காடு வந்த சுற்றுலாப் பயணிகள் இந்த திடீர் அருவிகள் முன்பு நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.பி. அணையில் இருந்து 5,300 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் 5 மாவட்டங்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேஆர்பி அணையின் முழு கொள்ளளவான 52 அடியில் 51 அடிக்கு நீர் நிரம்பியதால் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர், கிருஷ்ணகிரியில் பெய்து வரும் கனமழையால் கே.ஆர்.பி. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தென்பெண்ணையாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications