மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த "மூலிகை" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!

கொரோனா தொற்று இல்லாத மூலிகை கிராமம் பேசப்பட்டு வருகிறது

Subscribe to Oneindia Tamil

கொடைக்கானல்: கொரோனாவா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறார்கள் மூலிகை கிராம மக்கள்..! யார் இவர்கள்? எங்கிருக்கிறார்கள்.. நம்ம ஊரில்தான்.. கொடைக்கானலில் இருக்கிறார்கள்..!

வெள்ளகவி கிராமம்..!

மலைகளின் இளவரசி கொடைக்கானல் இன்று உருவாவதற்கு முக்கியமான காரணமே இந்த வெள்ளகவி கிராமம்தான்.. இந்த கிராமம் 400 வருஷங்களுக்கு முன்பு தோன்றியதாம்.. சின்ன கிராமம்தான்.. 150 குடும்பங்கள்தான் இருக்கும்.. மொத்தமே 400க்கும் குறைவான மக்கள்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

 காட்டுப்பகுதி

காட்டுப்பகுதி

நடுகாட்டில் உள்ளது இந்த கிராமம்.. இவர்களுக்கென தனி சாலை வசதியெல்லாம் இல்லை.. காட்டுப்பகுதியில் ஒத்தையடி பாதையில்தான் நுழைந்து செல்லமுடியும்.. இந்த கிராமத்தில் இருந்து பெரியகுளம் செல்வதற்கு 6 கிமீ தூரம் நடந்துதான் போக வேண்டும்.

நறுமணம்

நறுமணம்

இவர்களின் முக்கிய தொழில் மலைப்பயிர்களை விளைவிப்பது.. ஏலக்காய், காபி, அவக்கோடா, மிளகு இப்படி விளைவித்து அதை குதிரையில் கட்டி, சந்தையில் விற்றுவருவார்கள்.. இந்த கிராமத்தின் அழகு, நறுமணத்தை கண்டு அழகில் மயங்கிவிடும் சுற்றுலாபயணிகள் சில சமயம், இங்கேயே தங்கிவிடுவார்களாம்.. இதைவிட இன்னொரு ஹைலைட் உள்ளது..

கிராமங்கள்

கிராமங்கள்

இந்த கிராமத்தை சுற்றி நிறைய காவல் தெய்வங்கள் இருப்பதால், செருப்புகளை போடாமல், வெறும் கால்களிலேயே கிராமங்களுக்குள் சுற்றி வருகிறார்கள்.. இவர்களை எந்த நோயும் இதுவரை அண்டியதில்லை.. அப்படியே வந்தாலும் கை வைத்தியம் கைவசம் உள்ளது..!

 சத்தாண உணவு

சத்தாண உணவு

இப்போது என்ன சமாச்சாரம் என்றால், இந்த கிராமத்திற்குள் கொரோனா தொற்று வந்ததே கிடையாதாம்.. இவர்கள் சத்தான காய்கறிகளை நிறைய சாப்பிடுகிறார்கள்.. எப்போதுமே மூலிகை காட்டுப்பகுதிக்குள் இருப்பதால், தொற்று இவர்களை அண்டவே இல்லை.. அதனால், யாருமே மாஸ்க் போடாமல் ஹாயாக விவசாயம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+