கொடநாடு காவலாளி படுகொலை பயங்கரம்.. தலைமறைவான இருவர் கேரளாவில் கைது
கொடநாடு காவலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கேரளாவில் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: கொடநாடு கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரைப் பிடிக்க போலீசார் கேரள மாநிலத்திற்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்ற வந்த மர்ம நபர்கள் சிலர் காவலாளி ஓம்பகதூரை அடித்துக் கொன்றுவிட்டு கொள்ளையடித்துச் சென்றனர்.
பல மர்மங்களும், திருப்புமுனைகளும் கொண்ட இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த 11 குற்றவாளிகளில் 7 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கனகராஜ் மரணம்
கனகராஜ் என்பவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார். சயான் என்பர் சாலைவிபத்தில் படுகாயம் அடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முக்கிய குற்றவாளியான மனோஜ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மனோஜ் கைது
அவரை கொடநாடு பங்களாவிற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கொலை செய்தது குறித்து செய்முறை விளக்கம் செய்து காட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவரிடம் பெற்ற தகவலின் அடிப்படையில் மேலும் இருவரை பிடிக்க போலீசார் தயாரானார்கள்.

2 பேர் கைது
தலைமறைவாக உள்ள அவர்கள் இருவரை கைது செய்ய தீவிரம் காட்டிய போலீசார் கேரளாவிற்கு விரைந்தனர். அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், தலைமறைவாக இருந்த இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

ஆலோசனை
முன்னதாக, கொடநாடு கொலை பற்றி டிஎஸ்பி முரளிரம்பா மற்றும் கோவை சரக டிஐஜி தீபக் தாமுர் ஆகியோர் கோத்தகிரி காவல் நிலையத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த ஆலோசனைக்கு பின்னர் கோத்தகிரியில் பேட்டி அளித்த போது கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டது குறித்து முரளிரப்பா அறிவித்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications