எடப்பாடி தலையில் இடியை இறக்கும் திமுக.. தலைவலியை தரப் போகும் சிக்கல்! ‘அந்த’ மேட்டரா? ஷாக் அதிமுக.!
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் கூட்டணிப் பேச்சு வார்த்தைகள் தீவிரமடைந்து இருக்கிறது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளை சிக்க வைக்க ஆளும் கட்சிகள் முயன்று வருகின்றன. மத்திய அமைப்புகள் மூலம் திமுகவை பாஜக மிரட்ட முயல்வதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுகம் எதிர்க்கட்சியான அதிமுகவை லஞ்ச ஒழிப்புத்துறை சிபிசிஐடி மூலம் சிக்க வைக்க முனைப்பு காட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் இவ்வளவு நாள் தூங்கிக் கொண்டிருந்த கொடநாடு கொலைகளை வாழ்க்கை மீண்டும் தூசி தட்டி எடுத்திருக்கிறது ஆளும் தரப்பு.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பகுதியில் 2017 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடைப்பெற்றது. இந்த சம்பவம் நடந்த போது எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தார்.
2017ஆண்டு பங்களாவுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சென்றதோடு காவலாளி ஓம் பகதுரையும் கொலை செய்தனர். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சொந்தமான ஒரு பங்களாவில் அக்கட்சி ஆட்சியில் இருக்கும் போது நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நபர் என கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனரான கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். மேலும் கோடநாடு கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து பல திருப்பங்களை சந்தித்த இந்த வழக்கு தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டு அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு கடந்த எட்டாண்டு காலமாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
வழக்கினை மறுவிசாரணை செய்ய அப்போதைய மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா தனிப்படை காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதற்காக மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி முதல் தற்போது வரை 316 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேர், மேலும் வாகன விபத்தில் இறந்த கனகராஜன் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் மற்றும் கொடநாடு மேலாளர் நடராஜ், சசிகலா, சசிகலா உறவினர் விவேக், தற்கொலை செய்துகொண்ட கோடநாடு கணினி பொறியாளர் தினேஷின் தந்தை போஜன் உள்ளிட்ட பலரிடமும் இந்த விசாரணையானது தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை உதகை போலீசாரே விசாரித்த நிலையில் 2021 இல் திமுக ஆட்சி வந்தால் கொடநாடு வழக்கை விரைவாக முடித்து தொடர்புடையவர்களுக்கு தண்டனை பெற்று தரப்படும் என கூறினார் முக ஸ்டாலி. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இதுவரை 316 பேரிடம் சேகரிக்கப்பட்ட வாக்கு மூலங்கள் மற்றும் கைப்பற்றபட்ட 1500 பக்க ஆவணங்கள் நீதிமன்றத்தில் நீதிபதி முருகனிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் சாட்சிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்கள் மூலம் சிபிசிஐடி போலீசார் விரைவில் விசாரணையை துவக்கினர். கொடநாடு எஸ்டேட் பங்களாவில் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு போலீசார் கொடநாட்டில் ஆய்வு மேற்கொண்டு, கடந்த நவம்பர் மாதம் கொடநாட்டிற்க்கு சென்ற சிபிசிஐடி போலீசார் மேலாளர் நடராஜிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்கு பணிபுரியும் காசாளர் மற்றும் கணக்கீட்டாளர் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் பலரிடம் விசாரிக்க சிபிசிஐடி தரப்பு தயாராகி வருகிறது. பணியாளர்கள், குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்கள், முன்னாள் காவல் அதிகாரிகள், அரசியல்வாதிகள், என இந்த பட்டியல் நீள்கிறது. அதிலும் குறிப்பாக இளவரசி, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைகளின் பெயர்கள் அடிபடும் நிலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. கடைசியாக இந்த வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் தொடர்ந்து வழக்கு திடீரென சூடு பிடிக்க காரணம் என விசாரித்த போது தான் பல தகவல் கிடைத்தது. தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவை அமலாக்கத்துறை வருமானவரித்துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகள் மூலம் பாஜக மிரட்ட முயற்சிக்கிறது. அதேபோல தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவை சற்று நிலைகுலையச் செய்யும் வகையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறை சிபிசிஐடி மற்றும் பழைய வழக்குகளை தோண்டி எடுக்க திட்டமிட்டு இருக்கிறது திமுக.
அந்த வகையில் தான் கடந்த மாதம் வரை கிணற்றில் போட்ட கல்லாக இருந்த கோடநாடு கொலை வழக்கு விசாரணை தற்போது தீவிரத்தை எட்டி இருக்கிறது. இதுவரை சசிகலா ஜெயலலிதாவின் பாதுகாவலர்களாக இருந்த பெருமாள்சாமி, பெருமாள், ராஜா எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், சசிகலாவின் அன்னியர் இளவரசி, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என கூறுகின்றனர் சிபிசிஐ போலீசார். இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி சிக்கலில் வாழ்த்தும் நடவடிக்கை என்கிறது அதிமுக.
-
திமுக அமைச்சர்களின் தொகுதிகளில் களம் இறங்கும் அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? இதோ லிஸ்ட்! -
அட.. இதை கவனிச்சீங்களா? தமிழகத்திலேயே 2 குடும்பம் மட்டும்தான்! திமுகவில் களமிறங்கும் தந்தை - மகன்கள் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா? -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் கவுன்டவுன் ஸ்டார்ட்.. முன் கூட்டியே தொடங்கும் பிரச்சாரம்.. ஏவப்போகும் அஸ்திரம்












Click it and Unblock the Notifications