சென்னை ஐசிஎப்பில் ரூ.40 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட புதிய ரயில்... கொல்கத்தாவிடம் ஒப்படைப்பு!
சென்னை ஐசிஎப்பில் ரூபாய் 40 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில் கொல்கத்தா நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சென்னை: கொல்கத்தாவிற்கான மெட்ரோ இரயில் சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கபட்டு அதன் பணி முடிக்கப்பட்ட நிலையில் இன்று கொல்கத்தா மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்கபட்டது. ரூபாய் 40 கோடி செலவில் இந்த ரயில் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலை இந்தியன் இரயில்வே போர்டு தலைவா் ஏ.கே மிட்டல் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ் குமார்சிங்கா மற்றும் ஐ.சி.எப் பொது மேலாளர் மணி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த ரயில் 40 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கபட்டுள்ளது. இந்த ஆண்டு மட்டும் கொல்கத்தா மெட்ரோவிற்காக ஐசிஎப் 26 ரயில்களை தயார் செய்து அளிக்கவுள்ளது.
இந்த ரயிலில் 358 பேர் பயணிக்க கூடிய வகையில் 8 பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் ஏசி அறைகள் அமைக்கப்பட்டு சிசிடிவி கேமரா மற்றும் ஆட்டோ மேட்டிக் கதவு வசதியும் செய்யப்பட்டுள்ளன.
இதே வசதிகளை கொண்ட இரயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டால் 80 கோடி வரை செலவாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மெட்ரோவிற்கு ஐசிஎப்பில் பெட்டிகள் தயாரிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் அதற்காகவே இன்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநா் நேரில் வந்து கொல்கத்தாவிற்கு அனுப்பிய ரயிலை பார்வையிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications