காவிரியில் அணை: கர்நாடக அரசை கண்டித்து ஒசூரில் நாளை மறுநாள் கொ.ம.தே.க போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு அணை கட்டுவதை கண்டித்து ஒசூரில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கர்நாடக-தமிழக எல்லையான மேக்கேதாட்டு பகுதியில் காவிரி ஆற்றுக்கு குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து அதற்கான டெண்டர்களை கோரியுள்ளது.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும் கர்நாடகம் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று அறிவித்துள்ளது. மேலும் ஒகேனக்கல் கர்நாடகாவுக்கு சொந்தமான பகுதி என்றும் எனவே மறு சர்வே நடத்த வேண்டும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

Kongunadu Makkal Desiya Katchi to protest against Karnataka government in Hosur

இதனிடையே ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக அணைகளைக் கட்டுவதற்கான அனைத்து பணிகளையும் மிக வேகமாக செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு அனுமதி கோரி மத்திய அரசு, நீதித்துறையை அணுகி உள்ளது.

தமிழக மக்களுக்கு எதிராக கர்நாடக மக்களுக்கிடையே வெறுப்புணர்ச்சிகளை தூண்டி சுயநல அரசியல் செய்து வரும் கர்நாடக முதல்வர் சித்தாராமையா, ஒகேனக்கல் எல்லை பகுதி குறித்து கர்நாடகத்துக்கும், தமிழகத்துக்கும் இடையே பிரச்சினை நீடிக்கிறது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் கிடையாது.

ஓகேனக்கல் பகுதி தமிழகத்திற்கு சொந்தமானது. தமிழகத்தின் எல்லைக்குள் தான் இருக்கிறது. இதுபோன்ற தொடர் சர்ச்சைகளை ஏற்படுத்தி இரு மாநில மக்களுக்கிடையே பகையுணர்வையும், அமைதியற்ற சூழ்நிலையையும் ஏற்படுத்தி வருவதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுதல், ஒகேனக்கல் பகுதியை உரிமை கொண்டாடுதல், காவிரிநீர் பங்கீட்டு பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவது ஆகிய பிரச்சினைகளை முன்வைத்து, கர்நாடக முதல்வர் சித்தாராமையாவை கண்டித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில், வருகின்ற 17ம் தேதி, புதன்கிழமை, ஓசூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+