கூடங்குளம் அணுஉலையில் பழுது காரணமாக 1000 மெகாவாட் மின்உற்பத்தி பாதிப்பு!
கூடங்குளம் அணுஉலையில் பழுது காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை: கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் வால்வு பழுது காரணமாக 1000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் கடந்த ஜூன் மாதம் 26 ந்தேதி வால்வு பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்பு மே 28 ஆம் தேதி பழுது சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட்டது.

படிப்படியாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு ஜூன் 29 ந்தேதி 1000 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டியது. அதில் இருந்து இன்று வரை 36 நாட்கள் தொடர்ந்து 1000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று வால்வு பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. பழுது சரி செய்யப்பட்டு இரண்டு அல்லது மூன்று தினங்களில் மீண்டும் மின்னுற்பத்தி துவங்கும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அணுஉலைகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து எந்தவித மின் உற்பத்தியும் தற்போது இல்லை. முதலாவது அணுஉலை கடந்த ஏப்ரல் 13 ந்தேதி எரிபொருள் நிரப்பும் பணிக்காக நிறுத்தப்பட்டு, இன்று வரை மின் உற்பத்தி செய்யப்படாமல் இருப்பது கூறிப்பிடத்தக்கது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications