சாகை வார்த்தலுடன் கோலாகலமாக தொடங்கியது கூத்தாண்டவர் கோவில் சித்திரைப் பெருவிழா!
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தொடங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் கடந்த 21ம் தேதி சாகை வார்த்தலுடன் சித்திரை பெருவிழா துவங்கியது. மே 5ம் தேதி சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சியும், 6ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. இதில் நாடெங்கிலுமிருந்து பல ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் பங்கேற்பர்.

கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு கூவாகத்தில் தங்கும் விடுதி, கழிப்பறை மற்றும் அடிப்படை வசதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வுக் கூட்டம் நடந்தது. திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., பாரதிதேவி தலைமை தாங்கினார்.

இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் முத்துலட்சுமி, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜெயபாலன், துணை பி.டி.ஓ., ரமேஷ், ஆரம்ப சுகாதார நிலைய மேற்பார்வையாளர் பெருமாள், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் சந்தானகுமார் உள்ளிட்ட அலுவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமல்லாமல் இதர மாவட்டங்களில் இருந்தும், இதர மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வது வழக்கம். இதனால் இத்திருவிழாவை எந்தவித அசம்பாவிதங்களுமின்றி, சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

தற்காலிக பஸ் நிறுத்தம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தம் அமைக்கப்படும். தடையில்லா மின்சாரம் வழங்கவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும், தற்காலிக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தருவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications