கோவன் கைதுக்கு கொந்தளிக்கும் தமிழகம்… அப்படி என்னதான் பாடினார் கோவன்?
சென்னை: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் தேசபக்தி பாடல்களைப் பாடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் டாஸ்மாக் கடையை மூடச்சொல்லி பாடல் இயற்றி பாடிய கோவன் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரே நாள் இரவில் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கோவனின் கைது. யார் இந்த கோவன்? என்று கேட்டால் இவரை தமிழ்நாட்டின் ‘கத்தார்' என்று செல்லமாக அழைக்கின்றனர்.

"இட்லி ஒத்த ரூபா... கக்கூஸூ 5 ரூ.... சாப்பாடு 5 ரூபா.... பருப்பு 100 ரூபா" என்று இன்றைய நிலையை இயல்பாக பாடும் கோவன், கீழத் தஞ்சை மாவட்டத்தில் குடவாசல் பக்கத்தில் பெருமங்களம் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். விவசாயக் கூலி தொழில் செய்யும் குடும்பத்தில் பிறந்த கோவனுக்கு அம்மா பாடும் பாடல்கள்தான் இன்ஸ்பிரேசன்.
ஐ.டி.ஐ. படிப்பை முடித்துள்ள கோவன், 1996ம் ஆண்டு திருச்சி பெல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார். அவருக்கு நாட்டுப்புற பாடல்கள் பாடுவதில்தான் ஆர்வம் அதிகரித்துள்ளது. ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்' அமைப்பின் மையக் கலைக் குழுப் பாடகரான கோவனின் பாடல்கள், அரசியல் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம்!
வெள்ளை வேட்டி, சிவப்புத் துண்டு, வெற்று உடம்புமாக இவர் மேடையேறிப் பாடினால் அனல் தெறிக்குமாம். ‘கஞ்சி ஊத்த வக்கில்ல, என்னடா கெவர் மென்ட்டு... நாட்டைக் கூறு போட்டு வித்துப்புட்டு என்னடா பார்லிமென்ட்டு' என்ற கோவனின் சொற்களில் உழைக்கும் மக்களின் கோபம் கொப்பளிக்கிறது.
ஊர் ஊராக போய் ஆளும் அரசுக்கு எதிராகவும், அநியாயத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்திருக்கிறார் கோவன், 'ஊருக்கு ஊர் சாராயம்.... தள்ளாடுது தமிழகம்' என்ற பாடல் கோவனை உலக அளவில் பிரபலப்படுத்தியிருக்கிறது.
இதே அந்தப் பாடல்... நீங்களும் கேளுங்களேன்...
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications