Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில ஓடப்போகுது மெட்ரோ ரயிலு…

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் ஓடும் காலத்தை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் ஆவலை நிறைவேற்றும் வகையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே, மேம்பாலத்தில் முதல் கட்டமாக, மெட்ரோ ரயில் போக்குவரத்து விரைவில் துவங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் நேற்று சோதனை ஓட்டம் நடத்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக ரூ.20 ஆயிரம் கோடி செலவில் இருவழித் தடங்களில் 45 கி.மீ தூரத் துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதாவது, வண்ணாரப்பேட்டையில் தொடங்கி உயர்நீதிமன்றம், அண்ணாசாலை, சைதாப்பேட்டை வழியாக விமானநிலையம் வரை 23.1 கி.மீ தூரத்துக்கு முதல் பாதையும், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அண்ணா நகர், திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி, ஆலந்தூர் வழியாக பரங்கி மலை வரை 22 கி.மீ தூரத் துக்கு இரண்டாவது பாதையும் அமைக்கத் திட்டமிடப்பட்டது. அதன்படி, கடந்த 2009-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.

கோயம்பேடு – ஆலந்தூர்

கோயம்பேடு – ஆலந்தூர்

இரண்டாவது பாதையில் கோயம்பேடு - ஆலந்தூர் இடையே 13 கி.மீ. தூரத்துக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு கட்ட சோதனை ஓட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட் டுள்ளன.

சோதனை ஓட்டம்

சோதனை ஓட்டம்

இந்த வழித்தடத்தில், ஏழு ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு, ரயில்களின் சோதனை ஓட்டமும் நடத்தி முடிக்கப்பட்டது. இது தொடர்பான அறிக்கை, தெற்கு வட்டம், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதுகாப்பு ஆணையர் மிட்டல், துணை ஆணையர்கள் இருவர் என, மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் குழு, திங்கட்கிழமைன்று பெங்களூரில் இருந்து சென்னை வந்தடைந்தது.

மெட்ரோ ரயில் ஆய்வு

மெட்ரோ ரயில் ஆய்வு

காலை, 10 மணிக்கு, கோயம்பேடு ரயில் நிலையத்தில் ஆய்வை துவக்கியது. முதற்கட்டமாக ரயில்கள் இயக்கம், சிக்னல் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு நடந்தது. பயணிகளின் சேவையில் ரயில்கள் இயக்கம் இருப்பது போன்று, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில் நின்று செல்லும் வகையில் ஆய்வு பணி நடைபெற்றது.

மூன்றுவித சோதனை

மூன்றுவித சோதனை

மணிக்கு, 50 முதல் 60 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. ஓட்டுனர், கட்டுப்பாட்டு அறை, தானியங்கி என, மூன்று விதங்களில் ரயில்களை இயக்கி, சோதனை நடத்தப்பட்டது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ரயில் செல்லும் வழித்தடத்தில் ஏற்கனவே ஒரு ரயில் நிற்கும் பட்சத்தில், குறிப்பிட்ட தொலைவு இடைவெளியிலேயே ரயில் நின்று விடுவது என, ரயில்கள் இயக்கத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நேரடி ஆய்வு செய்யப்பட்டது. மதியம், 12:30 மணி வரை ஆய்வு நடந்தது.

இரண்டாம் கட்ட ஆய்வு

இரண்டாம் கட்ட ஆய்வு

ரயில்கள் இயக்கம், சிக்னல் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு முடிந்துள்ளது. ஆய்வு அறிக்கை தயார் செய்து, ஒரு வாரத்திற்குள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைப்போம். அவர்களிடம் இருந்து ஒப்புதல் கிடைத்ததும், இரண்டாம் கட்ட ஆய்வு நடத்துவோம். அப்போது, ரயில் நிலையங்கள், வழித்தடம் மற்றும் கட்டமைப்பு, பயணிகளுக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று பாதுகாப்பு ஆணையர் மிட்டல் தெரிவித்துள்ளார்.

எப்போது துவங்கும்

எப்போது துவங்கும்

மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரண்டாம் கட்ட ஆய்வு முடியும் நிலையில், அடுத்து தமிழக அரசிடம் பேச உள்ளோம். அப்போது, இயக்கத்திற்கான துவக்க தேதி இறுதி செய்யப்பட்டு, இந்த மாத இறுதிக்குள் ரயில் சேவையை துவக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

விபத்து காலங்களில்

விபத்து காலங்களில்

ரயில் இயக்கத்தின் போது, விபத்து நிகழ்ந்தால் பயணிகளை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்து, பாதுகாப்பு ஆணையர் குழு ஏற்கனவே கேள்விகளை எழுப்பியிருந்தது. அது போன்ற நேரங்களில், ஓட்டுனர் வைத்திருக்கும் அவசர சாவியை கொண்டு, ரயில் பெட்டிகளை திறந்து, பயணிகளை உடனே வெளியேற்ற முடியும். வழித்தடத்தையொட்டி அமைந்துள்ள நடைபாதை வழியாக, அருகில் உள்ள ரயில் நிலையத்தை பயணிகள் அடைய முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜெ.வுக்காக காத்திருப்பா?

ஜெ.வுக்காக காத்திருப்பா?

அதேசமயம் மெட்ரோ ரயில்சேவையை தொடங்குவதில் அரசு தயக்கம் காட்டுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலை பெற்று மீண்டும் முதல்வரான பின்னர் அவரது கையினால் இந்த ரயில் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. எது எப்படியோ சென்னையில் போக்குவரத்து பிரச்சினையை தீர்க்க மெட்ரோ ரயிலை விரைவில் இயக்கினால் சரிதான்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+