ஜெ.வை கண்ணாடி வழியாக பார்த்தாக செங்கோட்டையன் சொல்வது பொய்: கேபி முனுசாமி காட்டம்
ஜெயலலிதாவை அப்பல்லோவில் கண்ணாடி வழியாக பார்த்ததாக செங்கோட்டையன் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் கண்ணாடி வழியாக பார்த்ததாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது பொய் என ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் இருந்த போது யாரையும் பார்க்க சசிகலா அனுமதிக்கவில்லை என்பது தொடர் குற்றச்சாட்டு. தற்போது முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் இதை கூறி வருகிறார்.

சைகையில் பேசினார்
ஆனால் இதற்கு அமைச்சர்கள் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா தாம் கண்ணாடி வழியில் பார்த்தேன்; அவர் சைகையில் பேசினார் எனவும் செங்கோட்டையன் கூறியிருந்தார்.

கேபி முனுசாமி கண்டனம்
இதற்கு ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கே.பி. முனுசாமி கூறியதாவது:

ஜெ. ஆன்மாவுக்கு துரோகம்
சசிகலாவைக் காப்பாற்ற துடிக்கிறார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் இந்த கருத்து ஜெயலலிதாவின் ஆன்மாவுக்கு செய்கிற துரோகம்.

எச்சரிக்கை
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இதை பற்றி செங்கோட்டையன் ஏன் பேசவில்லை. இப்படி பேசிக் கொண்டிருந்தால் நாங்கள் வேறுவகையில் அதை எதிர்கொள்வோம் என எச்சரிக்கிறேன்.

டிடிவி தினகரனுக்கு தொடர்பே இல்லை
முதல்வர் பொறுப்பில் இருந்த போதுதான் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைப்பேன் என ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். டிடிவி தினகரனுக்கும் அதிமுகவுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை.
இவ்வாறு கே.பி. முனுசாமி தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications