பாஜகவை மறைமுகமாக சீண்டிய கேபி முனுசாமி.. யாரும் வர்றது இல்லையாம்.. எப்பவுமே அதிமுக திமுக தான்! ஆஹா!
நெல்லை: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, கூட்டணியில் இருக்கும் பாஜகவை சீண்டுவது போல பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வளர்மதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

அதிமுக துணை பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி பேசுகையில், "நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை எதிர்த்து ஆட்சியை பிடித்த கட்சி திராவிட கட்சிகள் தான். தமிழ்நாட்டில் எத்தனையோ தேசிய கட்சிகள் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற முடியவில்லை. 55 ஆண்டு கால திராவிட ஆட்சியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக தான் ஆட்சியில் இருந்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் பல கூட்டணிகள் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடி போட்டி. வருகிற தேர்தலில் 40-க்கு 40 சீட் என்ற கணக்கில் நாம் வெற்றி பெறுவோம். பல கட்சிகள் நம்முடன் கூட்டு சேரலாம். எந்தக் கட்சிகள் கூட்டு சேர்த்தாலும் கூட களத்தில் நின்று போராடுகின்றவன், கிராமத்தில் நின்று போராடுகின்றவன் அதிமுக தொண்டன் தான். ஆனால் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் யாரும் வருவதில்லை." எனப் பேசியுள்ளார்.
கூட்டணியில் இருக்கும் பாஜகவை அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி மறைமுகமாக சாடியுள்ளதாக பேச்சுகள் எழுந்துள்ளன. தேசியக் கட்சியாக இருந்தாலும் பாஜகவுக்கு இங்கு ஜெயிக்க வேண்டும் என்றால் அதிமுகவின் தயவு தேவை என்பதையே கேபி முனுசாமி அடிக்கோடிட்டுக் காட்டுகிறார் என்கிறார்கள். காரணம், கேபி முனுசாமி ஏற்கனவே பல முறை பாஜக பற்றி விமர்சித்துள்ளார்.
இப்போது பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்மையில் டெல்லியில் நடந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகில் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது. எனினும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடைபயண தொடக்க விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் கலந்துகொள்ளவில்லை.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் கலந்துகொள்ளாததற்கு முக்கியக் காரணமே ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டதுதான் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கேபி முனுசாமியின் இந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications