கிருஷ்ணகிரி வங்கிக் கொள்ளை- ஜார்க்கண்ட்டில் ஒருவர் கைது! வங்கதேசத்துக்கு தப்பிய கொள்ளையர்கள்!!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வங்கி ஒன்றில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி அருகே உள்ள ராமாபுரத்தில் குந்தாரப்பள்ளி பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி அதிகாலை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
வங்கியின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்து பாதுகாப்பு பெட்டகத்தை கேஸ் வெல்டிங் மூலம் உடைத்து 6,033 பவுன் தங்க நகைகளை அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இதன் மதிப்பு ரூபாய் 12 கோடியாகும்.
இந்த கொள்ளை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளையில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அவர்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஜார்கண்ட், ஒரிசா, மேற்கு வங்காளம் என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே, கொள்ளை நடந்த வங்கியில் 2 மாதங்களுக்கு முன்பு கதவுகளை சரி செய்வதற்காக வடமாநில தொழிலாளி ஒருவர் வந்து சென்றார். இதனால் அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அவரை தேடி கண்டுபிடித்து விசாரித்தனர். அப்போது அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்றும், அவர் கிருஷ்ணகிரியில் வசித்து வருவதும் தெரியவந்தது.
கடந்த ஒரு மாதமாக 10 தனிப்படை போலீசாரும் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அதன் பயனாக தற்போது குற்றவாளிகள் யார் என அடையாளம் தெரிந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி ஒருவனை போலீசார் பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அந்த குற்றவாளிக்கு தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், கர்நாடக மாநிலம் மைசூர் ஆகிய இடங்களில் நடந்த வங்கி கொள்ளையிலும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவனது கூட்டாளிகள் வங்காளதேசத்திற்கு தப்பி ஓடி விட்டார்கள். அவர்களை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் விரைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பிடிபட்ட பிறகே நகைகளை எங்கே பதுக்கி வைத்துள்ளனர் என்ற விவரங்கள் தெரியவரும்.
இதுபற்றி ஒரு போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, ‘‘வங்கியில் நடந்த நகை கொள்ளை வழக்கு தொடர்பாக ஒரு மாதமாக இரவு, பகலாக தொடர்ந்து விசாரணை நடத்தினோம். தற்போது இந்த வழக்கில் துப்பு துலங்கிவிட்டது. குற்றவாளிகளின் அடையாளமும் காணப்பட்டுவிட்டது. விரைவில் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications