சண்டிகரில் மர்ம மரணமடைந்த கிருஷ்ணபிரசாத்தின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
சண்டீகரில் மர்மமான முறையில் இறந்த தமிழக மருத்துவ மாணவர் கிருஷ்ணபிரசாத்தின் உடல் இன்று ராமேஸ்வரத்துக்கு கொண்டு வரப்படும்.
ராமேஸ்வரம்: சண்டீகரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்ற தமிழக மாணவர் கிருஷ்ண பிரசாத்தின் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விமானம் மூலம் இன்று ராமேஸ்வரத்துக்கு அவரது உடல் கொண்டு வரப்படும் என தெரிகிறது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி குருக்களின் மகன் கிருஷ்ணபிரசாத். இவர் சண்டீகரில் மத்திய அரசின் கட்டுபாட்டில் செயல்பட்டு வரும் பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் (PGIMER)மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.

இவர் விடுதி அறையில் நேற்று மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். தகவலறிந்து அவரின் தந்தை உட்பட உறவினர்கள் சண்டீகருக்கு புறப்பட்டு சென்றனர்.
அவரின் மரணம் குறித்து கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சண்டீகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் இன்று மதியம் விமானம் மூலம் அவரது உடல் சண்டீகரில் இருந்து மதுரை வருகிறது.
அங்கிருந்து இன்றிரவு ராமேஸ்வரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications