இடிந்தகரையில் அணு உலை எதிர்ப்பு போராட்ட தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு!
இடிந்தகரை: கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று இடிந்தகரையில் நடைபெற்றது.
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் அந்தோணி ஜான், ராஜசேகர், ரோசலின், சகாயம் ஆகியோர் போலீசாரின் ஒடுக்குமுறையினால் உயிரிழந்தனர். இவர்களது 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு மணப்பாடு கிராமத்திலிருந்து அந்தோணி ஜான் சுடர், கூடங்குளத்திலிருந்து ராஜசேகர் சுடர், இடிந்தகரையிலிருந்து ரோசலின் பெண்கள் சுடர், சகாயம் இளைஞர் சுடர் ஆகியவைக் கொண்டு வரப்பட்டன.

இடிந்தகரைப் பெண்கள் குழு, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் இடிந்தகரையில் அமைக்கப்பட்டு நினைவேந்தல் பந்தலில் 4 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயகுமார், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தெஹலான் பாகவி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications