கூடங்குளம் அணு உலை, இந்தியா-ரஷ்யா உறவின் மைல் கல்: காணொளி காட்சியில் மோடி பெருமிதம்
டெல்லி: கூடங்குளத்தில் செயல்பட்டு வரும் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையை நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்வில் ரஷ்ய அதிபர் புதின், பிரதமர் மோடி, முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் இன்று மாலை 3.30 மணிக்கு காணொளிக் காட்சி மூலம் பங்கேற்றனர்.
அப்போது டெல்லியில் இருந்து காணொளி காட்சி மூலம் மோடி பேசியதாவது: இந்தியா, ரஷ்யா விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ரஷ்யாவுக்கு இந்தியர்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

அணு உலை அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி (தமிழில் சொன்னார்). இந்தியாவிலேயே,1000 மெகாவாட் ஒரே உலையில் உற்பத்தியாகும் முதல் இந்திய அணு உலை இதுதான்.
இந்திய ரஷ்ய உறவில் இது ஒரு மைல்கல். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் இது செயல்பட வேண்டும். நாட்டு வளர்ச்சிக்கு கூடங்குளம் அணுமின் நிலையம் உதவியாக இருக்கும்.

ரஷ்ய அதிபர், புடினின், தனிப்பட்ட அக்கறை, உறுதியான தலைமை இந்த திட்டத்தை நனவாக்கியுள்ளது. இந்தியா-ரஷ்யா உறவு நீண்டகாலம் நீடிக்க விரும்புகிறேன் (ரஷ்ய மொழியில் சொன்னார்). அடுத்ததாக சீனாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் புடினை சந்திக்க உள்ளேன். எங்களோடு இணைந்ததற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு மோடி கூறினார்.
புடின் பேசுகையில், இந்த அணு உலை, 2 நாடுகள் உறவை மேம்படுத்தும். உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட அணு உலை இதுவாகும். கூடங்குளத்தில் 3 மற்றும் 4வது அணு உலை பிரிவும் தொடக்கப்படும். இவ்வாறு புடின் தெரிவித்தார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications