For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரதமராக நீங்க எந்த தொகுதியில் மனு தாக்கல் செய்துள்ளீர்?.. ஜெவுக்கு குமுரிமுத்து கேள்வி

|

கரூர்: முதல்வர் ஜெயலலிதா எந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பிரதமராக? என கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தி கேட்டார் நடிகர் குமரி முத்து.

கரூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சின்னச்சாமிக்கு ஆதரவாக குமரி முத்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், கரூர் தொகுதியில் 5 வருட காலம் எந்தவித நன்மையும் செய்யாதவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது. மக்களின் நிலை அறிந்து உதவி செய்பவர்களுக்கு வாக்களியுங்கள்.

Kumari Muthu's poser to ADMK

மக்களுக்கு நன்மை செய்ய கலைஞரை விட்டால் வேறு ஆள் கிடையாது. ஜெயலலிதா மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. தாலிக்கு தங்கம் தருகிறேன் என்றார்.

95 சத மக்களுக்கு நன்மை செய்யவில்லை. திருச்சியில் ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்காக ரயில்வேக்கு சொந்தமான 60 மரங்களை வெட்டி இப்போது, 6 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார்.

முசிறியில் பிரச்சாரம் செய்ய ஜெயலலிதா ஹெலிகாப்டரில் வந்து இறங்குவதற்காக 500 மரங்களை அதிமுகவினர் வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். ஜெயலலிதா பிரதமாகிவிடுவார் என அதிமுகவினர் கூறி வருகின்றனர். ஜெயலலிதா எந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்றார் குமரியார்.

English summary
Actor Kumari Muthu said in his campaign in Karur that he wants to know whether CM Jayalalitha is contesting anywhere in the election?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X