குரங்கணி காட்டுத் தீ: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மரணித்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
ஈரோட்டை சேந்தவர் திவ்யா. இவரும் இவரது குரங்கணி மலையேற்றத்திற்கு சென்றுள்ளனர்.
காட்டுத் தீயில் சிக்கி இறந்த விவேக்கின் உடல் நேற்று (திங்கள்கிழமை) மீட்கப்பட்ட சூழ்நிலையில் இன்று அவரது மனைவி திவ்யா சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
- உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டும்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே
- திருநங்கை மணமகள் திருநம்பி மணமகன் - சென்னையில் ஒரு சுயமரியாதைத் திருமணம்
நவம்பரில் திருமணம்
துபாயில் பணிபுரியும் விவேக்கிற்கு கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதிதான், திவ்யாவுடன் திருமணம் நடந்துள்ளது.
திருமணம் முடித்து துபாய் சென்ற அவர், விடுமுறைக்காக தனது சொந்த கிராமத்திற்கு மார்ச் 1 ஆம் தேதி வந்துள்ளார்.
வாழ்வின் அனைத்து முக்கிய தருணங்கள் குறித்தும் சமூக ஊடகத்தில் எழுதி இருக்கும் விவேக், இந்தப் பயிற்சிக்காக திட்டமிட்டது முதல் தேனிக்கு சென்றது வரை இந்த மலையேற்றம் குறித்த அனைத்து விஷயங்களையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இவருடன் மலையேற்றத்திற்கு சென்ற தமிழ்செல்வனும் இந்த தீவிபத்தில் பலியாகி உள்ளார்.
இவர்கள் திருமணம் நடைப்பெற்று அண்மையில் நூறு நாள் நிறைவடைந்துள்ளது. அதை கொண்டாடும் விதமாகதான் இவர்கள் இந்த மலையேற்றத்திற்கு சென்றுள்ளார்கள்.
யோகா பயிற்றுநர்
மதுரையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த சக்திகலாவும் இன்று காலை 10 மணிவாக்கில் இறந்துள்ளார்.
சக்திகலா யோகா பயிற்றுநராக உள்ளார்.
இவருக்கு பாவனா, சாதனா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மலையேற்றத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சக்திகலா, தமது குழந்தைகளையும் எப்போதும் மலையேற்றத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அண்மையில் அவர்கள் சத்தியமங்கலம் பகுதிக்கு சென்று வந்ததாக அக்குழந்தைகள் கூறுகின்றனர்.
காட்சி பொருள் அல்ல
தீ காயம் அடைந்தவர்களை பார்க்க யாரும் வராதீர்கள் என்கிறார் தீ காயம் அடைந்த அனுவித்யாவின் சகோதரர் ஜனார்த்தனன்.
அனுவித்யா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
ஜனார்த்தனன், "யார் வருகிறார்கள் என்றே தெரியவில்லை. தொடந்து பலர் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இங்குள்ள யாரும் காட்சி பொருள் அல்ல. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் இருக்கிறது." என்கிறார்
பிற செய்திகள்:
- உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதலளிக்க வேண்டும்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே
- தடையை மீறி வட கொரியாவுடன் சிங்கப்பூர் நிறுவனம் தொடர்பு
- நேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 49 பேர் பலி
- "திங்கட்கிழமை காலையில் வந்துடுறேன் அப்பா!" குரங்கணி காட்டுத் தீ-பிபிசி செய்தியாளரின் அனுபவம்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications