பேரம் படிந்துவிட்டது... சேர்ந்துவிட்டார்கள்.. மக்களுக்கு என்ன பயன்?- குஷ்பு
Recommended Video

சென்னை: அதிமுக அணிகளுக்குள் பேரம் படிந்துவிட்டது... சேர்ந்துவிட்டார்கள். இதனால் மக்களுக்கு என்ன பயன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை குஷ்பு.
அதிமுக அணிகள் இணைப்பு பற்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு இப்படிக் கூறியுள்ளார்:

தமிழ்நாட்டு அரசியலை பார்த்து உலகம் முழுவதும் கிண்டல் செய்கிறார்கள். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இருவருக்கும் வேறு எந்த சாய்சும் இல்லை. அதனால் இணைந்து இருக்கிறார்கள். அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
நேற்று வரை எப்படி எப்படியெல்லாம் திட்டிக் கொண்டார்கள்... இப்போது எப்படி திடீரென்று இணைந்தார்கள்? பேரம் படிந்து இருக்கிறது. நேரம் வந்து விட்டது. சேர்ந்து விட்டார்கள். நினைத்துப் பார்த்தால் கேலிக் கூத்தாகத்தான் தெரியும். இவர்கள் இணைவதால் மக்களுக்கு என்ன பயன்? அவர்களுக்கு மட்டும் நன்மை இருக்கலாம்.
நாலு வருடம் நாற்காலியில் இருப்பது எப்படி? பணம் சம்பாதிப்பது எப்படி? என்பது மட்டும்தான் அவர்களது குறிக்கோள். அதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.
அ.தி.மு.க.வில் எத்தனை அணிகள் வந்தாலும் சரி, எத்தனை அணிகள் இணைந்தாலும் சரி மக்களுக்கு எந்த நன்மையும் கிடையாது.
கட்சியில் இணைந்தாலும், ஆட்சி நீடிக்க வேண்டுமே. 3-வது அணியான தினகரன் அணியில் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்? அவர்களும் பேரத்துக்கு சோரம் போய்விடுவார்களா? என்பதை பார்க்க வேண்டுமே.
சசிகலா பண பலத்தால் எதையும் சாதிப்பார். கூவத்தூரில் ரிசார்ட் அரசியல் செய்யவில்லையா? ஜெயிலுக்குள்ளும் தாராளமாக வெளியே சென்று வரவில்லையா? இனியும் கூவத்தூர் பாணியில் ரிசார்ட் அரசியல் நடத்தமாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்?
பா.ஜனதாவால் தமிழகத்துக்குள் நுழைய எந்த வழியும் இல்லை. அதனால் இந்த பாதையை தேர்வு செய்து இருக்கிறார்கள். அவர்களின் நெருக்கடியால் இணைகிறார்கள். 4 வருடமும் இப்படியே அடிமைபோல் இருப்பார்கள். ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
-
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications