மயிலாப்பூரில் போட்டியா? மறுக்கும் குஷ்பு... தலைமை கட்டளையிட்டால் போட்டியாம்!
சென்னை: நான் மயிலாப்பூரில் போட்டியிடப் போவதாக வெளியான செய்தி பொய்யானது என்று நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கூறியுள்ளார். சீட் கேட்டு தான் விருப்பமனு அளிக்கவில்லை என்று கூறும் குஷ்பு, சோனியா காந்தியோ, ராகுல்காந்தியோ கட்டளையிட்டால் போட்டியிடுவேன் என்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு இன்று சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை சந்தித்து பேசினார். அவரது உடல் நலம் விசாரித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவினர் எப்படிப்பட்டவர்கள் என்பதை உத்தரகாண்ட் மாநிலத்தில் வாயில்லாத ஜீவனான குதிரையை ஒரு எம்.எல்.ஏ. அடித்து காலை உடைத்ததை எல்லாரும் பார்த்தோம். வாயில்லாத ஜீவனையே சித்ரவதை செய்யும் இவர்கள் நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்.
மோடி அலை மோடி அலை என்கிறார்கள். அப்படி ஒரு அலை இருப்பதாக தெரியவில்லை. லோக்சபா தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு அலை ஏற்பட்டுள்ளது. இப்போது அது சாந்தமாக உள்ளது. தேர்தலில் அது புயலாக வீசும்.
இந்தியா முழுவதும் எந்த மாநிலத்திலும் பாஜக உடன் கூட்டணி அமைக்க பயந்து ஓடுகிறார்கள். தமிழ்நாட்டிலும் பாஜகவிற்கு அதே நிலைதான் உள்ளது.
பிரகாஷ் ஜவடேகர் வந்தார். எல்லாரிடமும் பேசிப் பார்த்தார். ஆனாலும் பாஜகவிற்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
நான் காங்கிரசுக்கு வந்ததும் சொன்னேன் தாம்பரத்தை தாண்டினால் பாஜகவை யாருக்கும் தெரியாது என்று அந்த கட்சி இன்றும் அதே நிலையில்தான் உள்ளது. 6 லட்சம் தொண்டர்கள் இருப்பதாக பா.ஜ.க.வினர் சொல்கிறார்கள். ஆனால் 6 ஆயிரம் பேர் கூட ஓட்டு போடவில்லையே.
காங்கிரசை பொருத்தவரை நான் ஒரு சாதாரண தொண்டர். என்னால்தான் காங்கிரஸ் பேசப்படுகிறது என்று சொல்ல மாட்டேன்.
இப்போது காங்கிரஸ் வளர்ச்சி அடைந்துள்ளது. பேசப்படுகிறது. இதற்கு காரணம் தலைவர் இளங்கோவன்தான்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக நான் எந்த தொகுதிக்கும் மனு கொடுக்கவில்லை. அப்படி இருக்கும் போது மயிலாப்பூர் தொகுதி எங்கிருந்து வந்தது? அந்த தொகுதியில் நான் போட்டியிட்டால் தோற்கடிக்கப் போவதாக எப்படி தகவல்கள் வெளியானது?
யாருமே நேரடியாக எதுவும் சொல்லவில்லை. இது பற்றி நான் ஏதாவது சொன்னால் வதந்திகளுக்கு தீனி போட்டது போல ஆகிவிடும்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். அதற்காக ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும் என்றார்.
குஷ்புவின் தீவிர ஆதரவாளரான மயிலை அசோக் என்பவர் குஷ்புவின் பெயரில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்து உள்ளார். இது குஷ்புவிற்கும் தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இது குறித்து கருத்து கூறிய குஷ்பு, எனக்கா மனு கொடுத்து இருப்பது பற்றி அறிந்தேன். ஆனால் நான் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் தான் முடிவு செய்யும். மேலிடத்துக்குத்தான் எந்த தொகுதியில் யாரை நிறுத்துவது என்று தெரியும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications