கட்சித் தலைமை வாய்ப்பு கொடுத்தால் தேர்தலில் போட்டி: குஷ்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் போட்டியிட கட்சித்தலைமை வாய்ப்பு கொடுத்தால் போட்டியிடுவேன் என நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, கூட்டணி தொடர்பாக நல்ல முடிவை விஜயகாந்த் எடுப்பார் என்று தெரிவித்தார். அதிமுக அராஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று திமுகவும், காங்கிரஸ் கட்சியும் விரும்புகிறது. விஜயகாந்தும் அதைத்தான் விரும்புகிறார். எனவே அவர் காங்கிரஸ் கூட்டணிக்கு வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

ஐந்து ஆண்டுகளில் செய்யாததை தேர்தலுக்காக தமிழக அரசு செய்து வருகிறது. திசை திருப்பவே கார்த்தி சிதம்பரத்தின் விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர் என்றார். யாரும் ஓடிப்போய்விட மாட்டார்கள். 2ஜி ஊழல்னு சொன்னாங்க சம்பந்தப்பட்டவங்க ஊரை விட்டு ஓடிப்போகலையே, என்று கேட்ட குஷ்பு அதிமுகவினர் வேண்டும் என்றே அவையை முடக்குவதாக குஷ்பு குற்றம் சாட்டினார்.
தேர்தலில் போட்டியிட தமக்கு ஆசையில்லை என்றும் கட்சித்தலைமை வாய்ப்பு அளித்தால் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர் ஒருவர், மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேட்டார், அதற்கு பதிலளித்த குஷ்பு, தேர்தலில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல், தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தான் முடிவு செய்ய வேண்டும். இருப்பினும் தேர்தலில் போட்டியிடும் ஆசை இல்லை. கட்சியை வளர்க்கவே தாம் விரும்புவதாக கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications