ஜெயலலிதா நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளியை கொண்டாட வேண்டும்- குஷ்பு
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பி தீபாவளிப் பண்டிகையை தமிழக மக்களுடன் கொண்டாட வேண்டும் என்று

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த குஷ்பு அங்கே முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களை சந்தித்து ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிக்சை பெற்று வருகிறார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி தொடங்கி திமுக பொருளாளர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தினசரியும் அப்பல்லோவிற்கு வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, அவரது உடல்நலம் குறித்து அமைச்சர்களிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே இன்று காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளர் குஷ்பு அப்பல்லோ மருத்துவமனைக்கு வருகை தந்தார். மருத்துவமனைக்குள் சென்று அமைச்சர்களிடமும், மருத்துவர்களிடமும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். அரைமணிநேரம் மருத்துவமனைக்குள் இருந்த குஷ்பு, வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசினார்.

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பூரண குணமடைந்து வருவதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். அவர் விரைவில் நலமடைய இறைவனை வேண்டுகிறேன். முதல்வர் விரைவில் நலமுடன் வீடு திரும்பி மக்களுடன் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும் குஷ்பு தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications