குஷ்பு தாலி விவகாரம்... சாட்சி ஆவணங்கள் தாக்கல்: விசாரணை ஒத்தி வைப்பு
கும்பகோணம்: ருத்ராட்ச மாலையில் திருமாங்கல்யம் அணிந்தது தொடர்பாக நடிகை குஷ்பு மீது தொடரப்பட்ட வழக்கில் சாட்சி ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
விழா ஒன்றில் பங்கேற்ற நடிகை குஷ்பு திருமாங்கல்யத்தில் ருத்ராட்ச மாலை அணிந்து இருப்பது போன்ற படம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து இந்து மக்கள் கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளர் பாலா, கும்பகோணம் 2-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஜனவரி 9-ந் தேதி மனு தாக்கல் செய்தார்.

அதில் குஷ்பு திருமாங்கல்யத்துடன் ருத்ராட்ச மாலையை அணிந்தது ஆகம விதிகளுக்கு முரணானது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சரவணபவன், ஆகம விதிகள் பற்றிய ஆவணங்களை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.
அதன் படி மனுதாரர் பாலா சாட்சி ஆவணங்களாக பெரிய புராணம், திருவாசகம் மற்றும் சைவ சமய நெறி, ருத்ராட்ச மாலை அணிந்து கொள்ளும் முறை பற்றிய தகவல்கள் கொண்ட புத்தகங்களை கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணையை வருகிற 23-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications