For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட மாநிலத்தில் இருந்து வந்த குஷ்புவுக்கு தமிழ் பண்பாடு தெரியாது: வேல்முருகன் தாக்கு

By Veera Kumar
Google Oneindia Tamil News

விழுப்புரம்: வடமாநிலத்தில் இருந்து வந்த குஷ்புவுக்கு தமிழ் பண்பாடு தெரியாது, எனவே நாவடக்கத்தோடு இருக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.

வேல்முருகன் விழுப்புரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

Kushboo should speak with responsibility: Velmurugan

இளங்கோவனின் நாகரீகமற்ற பேச்சை கண்டித்து தமிழ்நாட்டில் பல்வேறு போராட்டம் நடக்கிறது. அவர் தான் கூறிய கருத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும். இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்து, அவர் பேசியது தவறு இல்லை என்று நடிகை குஷ்புவும் கருத்து தெரிவிக்கிறார்.

வடமாநிலத்தில் இருந்து வந்த அவருக்கு தமிழ் பண்பாடு குறித்து தெரியாது. ஏற்கனவே இதே போல் பேசி மக்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார். குஷ்புவுக்கு நாவடக்கம் தேவை. இல்லையென்றால் அவர் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இவ்வாறு வேல்முருகன் தெரிவித்தார்.

English summary
Kushboo should speak with responsibility says Tamilaga Vaalvurimai Party chief Velmurugan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X