அடுத்த பிரதமர் பெண் என்றால் பெருமை தான்... ஜெ. குறித்த கேள்விக்கு குஷ்பு ‘நறுக்’ பதில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவின் பிரதமராக ஒரு பெண் ஆட்சி புரிந்தால் பெருமையாகத் தான் இருக்கும். ஆனால், அந்நப் பெண் தமிழக முதல்வர் ஜெயலலிதாவா என திமுகவில் இருக்கும் நான் கருத்துக் கூற இயலாது எனத் தெரிவித்துள்ளார் திமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான நடிகை குஷ்பு.

நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் நடிகை குஷ்புவுக்கும் ஒரு தொகுதி ஒதுக்கப் படும் என்ற பேச்சு பொய்யாகிப் போன நிலையில், திமுக வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் குஷ்பு.

இந்நிலையில், தி இந்து நாளிதழுக்கு குஷ்பு பிரத்யேகப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்தியாவின் அடுத்த பிரதமர் குறித்த தனது கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.

Kushboo welcomes a woman for the PM post

இது தொடர்பாக மேலும், அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி....

மக்களிடம் மிகப்பெரிய எழுச்சி இருக்கிறது. மக்களின் அடிப்ப டைக் கட்டமைப்பு வசதிகள், அத்தியாவசியத் தேவைகளில் அரசின் பங்களிப்பு இல்லாதது, மின் வெட்டுப் பிரச்சினை, குடிநீர், சாலை வசதி போன்றவற்றை தற் போதைய அரசு மேற்கொள்ளாதது குறித்து பேசுகிறேன்.

மனம் விட்டுப் பேசும் மக்கள்...

மக்கள் கவனமாகக் கேட் கின்றனர். தனித்தனியாக மக்களைச் சந்தித்தும் பேசுகிறேன். அவர்கள் தங்கள் குறைகளை மனம் விட்டு சொல்கிறார்கள். திமுக மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

திமுக தான் எல்லாம்...

கட்சி யுடன் எனக்கு எந்தப் பிரச்சினை யும் இல்லை. நான் எப்போதும் திமுக-வில்தான் இருப்பேன். இதில் மாற்றமில்லை. மற்றபடி, நான் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டேன் என்பதெல்லாம் யூகங் கள். ‘சீட்' கேட்டு நான் விண்ணப்பம்கூட அளிக்கவில்லை. இதுதான் உண்மை.

அமைச்சர் ஆசையெல்லாம் இல்லை....

நான் இப்போது கட்சியின் ஆரம்ப நிலை யிலுள்ள தொண்டர். யாருக்கு, எந்த நேரத்தில் பொறுப்புகள் தரவேண்டும், சீட் தரவேண்டும் என்பதெல்லாம், கட்சித் தலை வரும் தளபதியும் முடிவு செய்வார்கள்.

நான் திமுக உறுப்பினர்...

மற்ற கட்சிகளுக்கு பிரச்சாரம் செய்யும் சினிமாத் துறை பெண் கள், அந்தக் கட்சி உறுப்பினர்களா என்பது தெரியாது. ஆனால், நான் திமுகவில் முறையாக சேர்ந்து, உறுப்பினர் அட்டை பெற்றுள்ளேன்.

திமுகவில் பெண்களுக்கு முன்னுரிமை...

அரசியல், சினிமா எல்லா வற்றிலும் பெண்கள் மட்டு மல்ல, அனைவரும் எதிர்நீச்சல் போட்டுத்தான் முன்னேற வேண்டும். கடினமாக உழைத்தால்தான் முன்னுக்கு வரமுடியும். திமுக- வைப் பொறுத்தவரை பெண் களுக்கு உரிய முன்னுரிமை தரப் படுகிறது.

நான் எப்படிச் சொல்வது...

ஜெயலலிதா குறித்து நான் திமுக-வில் இருக்கும் நிலையில் என்னிடம் நீங்கள் இந்த கேள்வியைக் கேட்கக் கூடாது.

பெண் பிரதமர் வந்தால் பெருமை தான்...

ஒரு பெண் என்ற முறையில் சொல்கிறேன். ஒரு பெண், நாட்டின் பிரதமராக வந்தால் அது நாட்டுக்கும், பெண்களுக்கும் பெருமைதான். ஆனால், அந்தப் பெண் நாட்டுக்கு நல்லது செய்யக்கூடியவராக இருக்க வேண்டும்.

தலைமைக்கு பொருத்தமானவர் ஸ்டாலின்...

திமுகவுக்கு அடுத்த தலைவராக ஸ்டாலின் வருவது நிச்சயம் சரியாக இருக்கும். தளபதியின் உழைப்பை யாராலும் குறைசொல்ல முடியாது. அவரது கடின உழைப்பு, கட்சியிலுள்ள அனைத்து தொண்டர்களுக்கும் தெரியும். அவர் தலைமைப் பதவிக்கு நிச்சயம் பொருத்தமானவர்தான். இது எழுதப்படாத உண்மை' என இவ்வாறு அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+