குற்றாலம் அருவியில் பயங்கர சத்தத்துடன் கொட்டும் வெள்ளம்... பயணிகள் குளிக்கத் தடை!
தென் மாவட்டங்களில் பெய்யும் கனமழை காரணமாக குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

குற்றாலம்: திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓகி புயல் உருவாகியுள்ளதன் எதிரொலியாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. திருநெல்வேலி,கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கையும்விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இப்போதே அதிக அளவில் காற்று வீசி வருவதாக மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இரவு முதல் மழையுடன், காற்றும் வீசி வருவதாக மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் கன்னியாகுமரி விரைந்துள்ளனர்.

நெல்லையிலும் கனமழை
குமரி மாவட்டம் போல நெல்லை மாவட்டத்திலும் தென்காசி, செங்கோட், குற்றாலம், வடகரை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் காலை முதலே மழை பெய்து வருகிறது.

அருவியில் வெள்ளப்பெருக்கு
இதனால் குற்றாலம், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்டவற்றில் வெள்ள நீரி பெருக்கெடுத்து ஓடுகிறது. அருவியின் மேல் இருந்து பயங்கர சத்தத்துடன் வெள்ள நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது, இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டள்ளது.

அப்புறப்படுத்தும் போலீசார்
எனினும் அருவியின் வெள்ளப் பெருக்குக்கு அருகில் நின்று பலர் புகைப்படம், செல்ஃபி எடுத்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்புப் பணியில் இருக்கும் போலீசார் வெளியேற்றி வருகின்றனர்.

நிர்வாகம் வேண்டுகோள்
புயல் எச்சரிக்கை காரணமாக கனமழை தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே வீண் விபரீதங்களில் பயணிகள் ஈடுபட வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications