வீட்டு வேலைக்கு வரும் இந்தியர்களுக்கு விசா அளிப்பதை நிறுத்திய குவைத்
சென்னை: பணிப்பெண்கள் மற்றும் பிற வீட்டு வேலைக்கு இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு விசா அளிப்பதை குவைத் அரசு நிறுத்தி வைத்துள்ளது.
வளைகுடா நாடுகளில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் மற்றும் பிற வேலைகளை செய்பவர்கள் கொடுமைக்கு ஆளாவதை தடுக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதையடுத்து வளைகுடா நாடுகளில் உள்ளவர்கள் இந்தியர்களை வீட்டு வேலைக்கு எடுக்கையில் வங்கியில் ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரொக்கத்தை உத்தரவாதமாக செலுத்த வேண்டும் என்று இந்திய அரசு தெரிவித்தது.

இந்திய அரசின் கோரிக்கையை குவைத் ஏற்கவில்லை. இதையடுத்து வீட்டு வேலைக்கு வரும் இந்தியர்களுக்கு விசா அளிப்பதை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து குவைத் அரசு விசா அளிப்பதை நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து குவைத்திற்கான இந்திய தூதர் சுனில் ஜெயின் கூறுகையில்,
வங்கியில் உத்தரவாத பணம் செலுத்தும் கோரிக்கையை குவைத் அரசு இன்னும் ஏற்கவில்லை. இது குறித்து குவைத் வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வேலைக்கு ஆட்கள் சட்டவிரோதமாக வருவதால் அவர்களை கண்காணிக்க முடியவில்லை.
எனவே வீட்டு வேலைக்கு வருபவர்களுக்கு விசா அளிப்பதை நிறுத்தி வைக்குமாறு குவைத் அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications