ஈரோட்டில் பரபரப்பு.. கந்துவட்டி கொடுமை.. சாணிபவுடரை குடித்து தொழிலாளி தற்கொலை முயற்சி!
கந்துவட்டி கொடுமை காரணமாக தொழிலாளி தற்கொலை முயன்றுள்ளார்.
Recommended Video

ஈரோடு: கந்து வட்டி கொடுமையால் சுமைதூக்கும் தொழிலாளர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொழிலாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். ஆவின் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பத்நகரை சேர்ந்த வாசு என்பவரின் நிதிநிறுவனத்தில் கந்து வட்டிக்கு பணம் பெற்றுள்ளார். 15 ஆயிரம் ரூபாய் பெற்று அதற்கு வாரந்தோறும் வட்டியும் அசலும் செலுத்தி வந்துள்ளார்.

5 வாரங்கள் 7,500 ரூபாய் பணம் செலுத்தியுள்ள நிலையில் மீதி பணத்தை செலுத்த காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நிதிநிறுவன ஊழியர்கள் பெருமாளை தாக்கியதோடு தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் சாணிபவுடரை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
இதனைகண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கந்து வட்டி பாதிப்பால் சுமைதூக்கும் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications