திருச்சி: முகத்தில் டேப் சுற்றி 'ஆசை' பட பாணியில் பெண் டாக்டர் கொலை
திருச்சி: திருச்சியில் பெண் டாக்டர் ஒருவர் 'ஆசை' சினிமா பட பாணியில் முகம் முழுவதும் பிளாஸ்டிக் டேப் ரோலால் சுற்றி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டாக்டரை கொலை செய்த மர்ம நபர்கள் அவர் வீட்டில் இருந்த நகை,பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருச்சி சமயபுரம் நெ.1 டோல்கேட் மாருதி நகரில் குடியிருக்கும் சார்லஸ் என்பவரது மனைவி டாக்டர் ஜூலியட் மேரி. இவர் நெ.1 டோல்கேட்டில் உள்ள பார்க்கவன் மருத்துவமனையில் கடந்த 18 ஆண்டுகளாக டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
கணவனை பிரிந்து வாழும் இவருக்கு ஜோஸ்வா என்கிற மகன் உள்ளார். இவர் பொறியியல் படித்து விட்டு பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
டாக்டர் ஜூலியட் வீட்டிலும் கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் மேல்வீட்டில் குடியிருக்கும் ரவிசங்கர், வீட்டு கதவை திறந்து பார்த்த போது முகத்தின் மீது தலையணை மூடிய நிலையில் போது இறந்து கிடந்தார்.
அதிர்ச்சி அடைந்த ரவிசங்கர், சம்பவம் குறித்து சமயபுரம் நெ.1 டோல்கேட் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த லால்குடி டி.எஸ்.பி அசோகன், இன்ஸ்பெக்டர்கள் சிறுகனூர் மன்னர் மன்னன், சமயபுரம் மனோகரன் உள்ளிட்ட காவலர்கள், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கணவரை பிரிந்து டாக்டர் ஜூலியட் தனியாக வசித்து வருகிறார். யாரிடமும் விரோதம் இல்லாத நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளது டாக்டர் மத்தியிலும், அப்பகுதியில் உள்ளவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூங்கும் நிலையில்
தூங்கும் நிலையிலேயே வீட்டின் பெட் ரூமில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். ஆனால் ரத்த காயங்களே இல்லை.
நகை பணம் கொள்ளை
மேலும் அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலி, இரண்டு கைகளிலும் அணிந்திருந்த வளையல்கள் இல்லை. மேலும் வீட்டிலிருந்த பீரோவில் வைத்திருந்த நகை மற்றும் பணம் காணவில்லை என்கின்றனர்.
போலீஸ் விசாரணை
ஜூலியட் மேரி தனியாக வசித்ததை நோட்டமிட்ட மர்மநபர் அவரை கொலை செய்து நகை மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்றும், ஜூலியட் மேரி வீட்டிற்கு தெரிந்த நபர் தான் உள்ளே புகுந்திருக்க வேண்டும் என்றும், ஜூலியட் மேரியிடம் தகராறு செய்து அவரது முகத்தை தலையணையால் அமுக்கி கொலை செய்திருக்க வேண்டும் என்கிற கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சினிமா பாணியில் கொலை
இந்த கொலை நகை மற்றும் பணத்தினை திருடுவதற்காக கொலை நடந்திருக்குமோ என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆசை திரைப்பட பாணியில் அரங்கேறியிருக்கும் இந்த கொலை திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications