சென்னையில் கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற கொள்ளையன்.. அடுத்து நடந்தது விபரீதம்
மதுரவாயலில் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி செய்யப்பட்டதை அடுத்து தவறி விழுந்த பெண் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
Recommended Video

சென்னை: மதுரவாயலில் கணவனுடன் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிளில் இருந்து பெண் தவறி விழுந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆவடி, பக்தவச்சலபுரம், பிரகாசம் தெருவை சேர்ந்தவர் ரவி (45). ஆவடியில் உள்ள கனரக தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி (43).

இவரது தாய்க்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்கு கணவன், மனைவி இருவரும் நேற்று இரவு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் செண்பகவல்லி அருகில் சென்று அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். சற்று சுதாரித்துக்கொண்ட செண்பகவல்லி கொள்ளையர்களிடமிருந்து தனது தங்க செயினை பாதுகாத்துக் கொள்ள செயினை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அப்போது நிலை தடுமாறி செண்பகவல்லி மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்.
இதனைக்கண்டதும் மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக சென்று விட்டனர். கீழே விழுந்ததில் செண்பகவல்லி தலையின் பின்புறம் பலத்த காயமும், வலது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டது.
இதையடுத்து ரவி உடனே தனது மனைவியை மீட்டு நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயினை பறிக்க முயன்றபோது பெண் தவறி கீழே விழுந்து காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications