நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது: சென்னை ஹைகோர்ட் அதிரடி
சென்னை: ஏரி மற்றும் நீர்நிலை பகுதிகள் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக அங்குள்ள ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட சென்னை மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கொளத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பை ஒழுங்கு செய்து, பட்டா வழங்க சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

கொளத்தூர் பகுதியில் உள்ள கொரட்டூர் ஏரி நீண்ட நாளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது மகாத்மா காந்தி தெரு, சிவசக்தி தெரு உள்ளிட்ட 4 தெருக்களில் 2,000 குடும்பங்கள் வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கு தமிழக அரசின் ஆக்ரமிப்புகளை வரைமுறைப்படுத்தும் சட்டத்தின் படி பட்டா வழங்க தமிழக அரசிற்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீண்ட நாட்களாக பயண்பாட்டில் இல்லை என்பதற்காக, ஏரி மற்றும் நீர்நிலை பகுதிகளில் உள்ள ஆக்ரமிப்புகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், நிலையான வளர்ச்சி என்ற இந்த புதிய காலகட்டத்தில் சுற்றுப்புறசூழலை பாதுகாப்பது மிகப் பெரிய பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. காற்று, நீர், தாவரங்கள், விலங்குகள் என அனைத்து இயற்கை அம்சங்களையும் பாதுகாப்பதற்கு உலகம் முழுவதுமே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இயற்கை தந்துள்ள ஆதாரங்களை இழந்துவிட்டால் எதிர்காலத்தில் அதை பெற முடியாது. எனவே அவற்றை பாதுகாப்பது அவசியம் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
-
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications