நிலம் கையப்படுத்தும் சட்டத்தில் நிலம் இழப்பவர்களுக்கு 4 மடங்கு இழப்பீடு – வெங்கையா நாயுடு அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: நிலம் கையக்கப்படுத்தும் திட்டத்தின் கீழ் பெறப்படும் விவசாயிகளின் நிலத்திற்கு ஈடாக 4 மடங்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு இதனைத் தெரிவித்தார்.

மேலும், "நிலம் கையகப்படுத்தும் சட்டத்திருத்த மசோதா மூலம் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு நான்கு மடங்கு வரை இழப்பீட்டு தொகை கிடைக்கும்" என்று தெரிவித்தார்.
நிலம் கொடுக்கும் விவசாயின் குடும்பத்தில் ஒருவருக்கு அங்கு முன்னெடுக்கப்படும் வளர்ச்சி திட்டத்தில் வேலையும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications