ராணிப்பேட்டையில் தாசில்தாரையே "அழ வைத்த" நபர்.. கதவை உள்பக்கமாக பூட்டிய ஆபீசர்ஸ்.. பலே
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் குட்டை தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ்... இவருக்கு சொந்தமாக அரை ஏக்கர் நிலம் உள்ளது.. ஆனால், இந்த நிலத்தினை திண்டிவனம் - நகரி இடையிலான ரயில் பாதை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது... இந்த நில மதிப்பீட்டு தொகையாக ரூ.6.27 லட்சம் கோவிந்தராஜூக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

ராணிப்பேட்டை: இதனால் ராணிப்பேட்டை நில எடுப்பு தாசில்தார் அலுவலகத்துக்கு சென்று, தாசில்தார் மதிவாணனை அணுகி உயில் பத்திரத்தை கேட்டார் கோவிந்தராஜ்.. ஆனால், பத்திரம் வழங்கவேண்டுமானால், நில மதிப்பீட்டு தொகையிலிருந்து 1 % அதாவது ரூ.6000 கமிஷனாக தர வேண்டும் என்று தாசில்தார் மதிவாணன் கறாராக சொல்லிவிட்டாராம்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன கோவிந்தராஜ், என் நிலத்துக்கு நானே லஞ்சம் தரணுமா? என்று கேட்டுள்ளார்.
ஆனால், லஞ்சம் தந்தால்தான், பத்திரப்படும் என்று தாசில்தார் பிடிவாதமாக சொல்லி உள்ளார்.. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்த கோவிந்தராஜ், ரூ.4,000 தருவதாக சொன்னாராம்.
பத்திரங்கள்: ரூ.6000 என்பதிலிருந்து ஒரு பைசாகூட இறங்கிவரவில்லையாம் தாசில்தார்.. அதுவும் இல்லாமல், பத்திரம் தராமல் இழுத்தடித்தபடியே வந்துள்ளார்.. இறுதியாக 31ம் தேதி, அதாவது நேற்றைய தினம் 4000 ரூபாய் பணத்துடன் தன்னை வந்து சந்திக்கும்படி தாசில்தார் சொல்லி உள்ளார்.

ஆனால், தன்னுடைய சொந்த நிலத்துக்கு, லஞ்சம் கொடுக்க விரும்பாத கோவிந்தராஜ், நேராக ராணிப்பேட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சென்று, புகார் தந்துவிட்டார்.. இதையடுத்து, ரசாயனம் தடவிய 4000 ரூபாய் நோட்டுகளை கோவிந்தராஜிடம் போலீஸார் கொடுத்தனுப்பினார்கள்.. நேற்றைய தினம் , தாசில்தார் சொன்னபடியே, பணத்துடன் சென்றார் கோவிந்தராஜ்..
லஞ்சப் பணம்: அந்த லஞ்சப்பணத்தை மதிவாணன் கையில் வாங்கியதுமே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் தாசில்தாரை கையும் களவுமாகப் பிடித்தனர்.. அத்துடன், தாசில்தார் ஆபீஸ் கதவையும் உள்பக்கமாக பூட்டிவிட்டு மதிவாணனிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள்.. இந்த சம்பவம் ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பை தந்துவிட்டது.
இப்படித்தான், 10 நாட்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) தபேந்திரன், வேடல் காந்தி நகரில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக அமைப்பதற்கு நிலத்தை பார்வையிடுதற்காக லஞ்சம் கேட்டாராம்.. இதையடுத்து, அதிகாரிகள் விரைந்து சென்று தபேந்திரனை சோதனையிட்டனர்..
ராணிப்பேட்டை: அப்போது அவரது பையில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் லஞ்சப்பணத்தை பறிமுதல் செய்தனர். உடனே தபேந்திரன் தனக்கு திடீரென நெஞ்சு வலிக்கிறது என்று சொல்லி கதறி அழுதார்.. அதனால், தபேந்திரனுக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தரப்பட்டது.. இப்போது இதே ராணிப்பேட்டையில் இன்னொரு அதிகாரியும் கையும் களவுமாக சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை தந்துவருகிறது.
பறிமுதல்: கோவிந்தராஜ்-க்கு சொந்தமான சோளிங்கர் பகுதியில் உள்ள நிலத்தில் 1913 சதுர மீட்டர் நிலம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, திண்டிவனம்- நகரி ரயில் பாதை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டது.. இந்த நிலத்திற்குதான் இழப்பீட்டுத் தொகை பெறுவதற்காக அனைத்து அசல் ஆவணங்களையும் கோவிந்தராஜ் கொடுத்திருந்தார்... அப்போதுகூட, பேரம் பேசி லஞ்சப்பணத்தை தாசில்தார் குறைக்கவேயில்லயாம்.. இறுதியில் தாசில்தார் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ8 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications