என்னால் மூச்சு விட முடியல.. ப்ளீஸ் தண்ணி கொடுங்க.. தலித் வாலிபர் சங்கரின் கடைசி வார்த்தை
சென்னை: என்னால் மூச்சுவிட முடியல.. ப்ளீஸ் தண்ணீர் கொடுங்க என்பதுதான் ஜாதி ஆணவத்தால் கொலை செய்யப்பட்ட சங்கர் பேசிய கடைசி வார்த்தையாகும்.
உடுமலைபேட்டை பஜாரில் தலித் இளைஞர் சங்கர் கூலிப்படையினரால் சரமாரியாக வெட்டப்பட்டார். அவரது மனைவி கவுசல்யாவும் வெட்டப்பட்டார்.

ஜாதி மாறி திருமணம் செய்ததற்காக இந்த ஆணவ தாக்குதல் நடந்துள்ளது அம்பலமானது. வெட்டப்படும் காட்சிகள் சிசிடிவி காமிராவில் பதிவானது. நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகமெங்கும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சங்கர் மற்றும் கவுசல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உள்ளான காட்சிகள் வீடியோவாக வெளியாகியுள்ளன.
சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்த நிலையில், கவுசல்யா உயிர் பிழைத்து சிகிச்சை பெற்றுவருகிறார். இதனிடையே, சங்கருக்கு சிகிச்சையளிக்கும் காட்சி மிகவும் கொடூரமாக உள்ளது.
அந்த காட்சியில், ஐசியூ போன்ற தனித்த பிரிவில் வைத்து சிகிச்சையளிக்காமல் பொது பிரிவில் வைத்து மருத்துவ ஊழியர்கள் முதலுதவி செய்கிறார்கள். ரத்தம் கொப்பளிக்கும் பகுதிகளில் பஞ்சு வைத்து கட்டப்படுகிறது.
பாதி மயக்க நிலையில் கிடந்த சங்கருக்கு ட்ரிப்ஸ் ஏற்றப்படுகிறது. அப்போது, "ப்ளீஸ், ப்ளீஸ் தண்ணி குடுங்க. தண்ணி குடுங்க. என்னால மூச்சு விட முடியல.." என சங்கர் கதறுகிறார்.
தண்ணீர் கொடுப்பது போன்ற காட்சி எதுவும் வீடியோவில் இல்லை. பின்னர், ஆம்புலன்சில் ஏற்றி மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படும் காட்சி அதில் உள்ளது. ஆம்புலன்சில் கவுசல்யா அமர்ந்திருக்க, சங்கர் உயிருக்கு போராடியபடி ட்ரிப்ஸ் ஏற்றிய நிலையில் கொண்டு செல்லப்படுகிறார். இதன்பிறகுதான் சங்கர் உயிரிழந்துள்ளார்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், சிகிச்சை நடைபெறுவது முதற்கொண்டு வீடியோ காட்சிகளாக பதிவாகியுள்ளது. இன்பெக்ஷனை தவிர்க்கும் வகையில் கூட்டம் சேருவதை மருத்துவர்கள் தவிர்ப்பது அவசியம். ஆனால், சந்தைக்கடை போல கூட்டம் நிரம்பி வழியும் ஒரு இடத்தில் சங்கருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது.
மூச்சு திணறலால் அவதிப்பட்ட சங்கருக்கு பிராணவாயு கொடுக்கப்படவில்லை என்பதும் அந்த வீடியோ காட்சிகளில் அம்பலமாகியுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications