நெல்லையில் விஜய்யின் கத்தி விழா... ரசிகர்கள் மீது தடியடி
திருநெல்வேலி: நெல்லையில் நடந்த கத்தி பட விழாவில் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்ததால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
கத்தி படத்தின் 50வது நாள் விழாவைக் கொண்டாட திருநெல்வேலிக்கு நேற்று வந்திருந்தார் நடிகர் விஜய்.

தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த அவருக்கு ரசிகர் மன்றம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரைப் பார்க்க ரசிகர்கள் முண்டியடித்தனர். இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சிரமமானதால், லேசான தடியடி நடத்தி கலைத்தனர் போலீசார்.
பின்னர் நெல்லையில் நடந்த கத்தி விழாவில் கலந்து கொண்ட விஜய், அங்கிருந்த கிளம்பும்போது மீண்டும் ரசிகர்கள் முற்றுகையிட்டனர். அதற்குள் விஜய் கிளம்பிவிட்டார்.
அவரைப் பார்க்க முடியாத கோபத்தில் ரசிகர்கள் பெரும் கலாட்டாவில் ஈடுபட, வேறு வழியின்றி மீண்டும் தடியடிப் பிரயோகம் நடத்தினர் போலீசார். அதன் பிறகே ரசிகர்கள் கலைந்தனர்.












Click it and Unblock the Notifications