For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதெல்லாம் உண்மைதானா? உதயமாகிறதா இளவரசிக்காக சின்ன சின்னம்மா பேரவை?

சசிகலாவின் சகோதரர் ஜெயராமனின் மனைவி இளவரசிக்கு 'சின்ன சின்னம்மா' என பட்டம் சூட்டியுள்ளனர் அதிமுகவினர்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மறைந்த சில நாட்களிலேயே அவரை அம்மா என்று அழைத்தவர்கள் இப்போது 'பெரியம்மா' என்கிறார்கள்.. ஜெயலலிதாவின் தோழி சசிகலாதான் 'சின்னம்மா' என்று மகுடம் சூட்டுகிறார்கள். இந்த நிலையில் மற்றொரு அதிகார மையமான இளவரசிக்கு 'சின்ன சின்னம்மா' என பட்டம் சூட்டியுள்ளனர் அதிமுகவினர்.

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது போயஸ் கார்டன் வீட்டில் சசிகலா, இளவரசி இருவருக்கும் இடையே யாருக்கு செல்வாக்கு? என்ற அதிகாரப்போட்டி இருந்தது. மன்னார்குடி வகையறாக்கள் நடத்தும் கம்பெனிகளில் சிலவற்றில் இளவரசிக்கும் கணிசமான பங்குகள் உண்டு.

lavarasi also gets new title "Chinna Chinnammaa"

ஜெயலலிதா உடல்நலக் குறைவு ஏற்பட்டது முதலே இளவரசி தரப்பு தலையெடுத்துவிடாதபடி சசிகலா பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. போயஸ் தோட்டத்தில் இளவரசியின் சகோதரர்கள் மற்றும் அவர்களது கை ஓங்கிவிடக் கூடாது என்பதில் சசிகலா கவனமாக இருந்து வந்தார்.

ஜெயலலிதா மறைந்த பின்னரும் இதே கண்காணிப்பை சசிகலா தரப்பு மேற்கொண்டு வந்தது. தற்போது சசிகலாவை அதிமுக பொதுச்செயலராக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஜெயலலிதாவை அம்மா என்ற அழைத்தவர்கள் இப்போது சசிகலாவிடம் 'சின்னம்மா' என மண்டியிட்டுக் கிடக்கிறார்கள்.

இதனிடையே சசிகலா சின்னம்மா என்றால் இளவரசி 'சின்ன சின்னம்மா' என வரிந்துக் கட்டிக் கொண்டு போஸ்டர் அடித்திருக்கிறது ஒரு கோஷ்டி. இளவரசியில் சகோதரர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் தஞ்சாவூர் கோட்டூர் பகுதியில்தான் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

ஆக அதிமுகவின் அடுத்த சின்னம்மாவும் ரெடி!

English summary
ADMK party ment gave a title "Chinna Chinnammaa" to Ilavarasi who also living in Jayalalithaa's Poes Garden Residence.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X