இனி அரசை புகழ்ந்து டாக்குமெண்ட்ரி படம்தான் எடுக்க முடியும்.. ப.சிதம்பரம்
சென்னை: மெர்சல் திரைப்பட வசனங்களுக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் ப.சிதம்பரம் பகிர்ந்துள்ள கருத்துக்கள்:

மெர்சல் திரைப்படத்தில் உள்ள வசனங்களை நீக்குமாறு பாஜக கோருகிறது. பராசக்தி படம் தற்போது வெளியாகியிருந்தால் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று எண்ணிப்பாருங்கள்.
Notice to film makers: Law is coming, you can only make documentaries praising government's policies.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 21, 2017
இயக்குநர்கள் கவனிக்க: சட்டம் வரப்போகிறது. நீங்கள், அரசின் கொள்கைகளை புகழ்ந்து டாக்குமென்ட்ரிகள்தான் எடுக்க முடியும். இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ப.சிதம்பரம்.
BJP demands deletion of dialogues in 'Mersal'. Imagine the consequences if 'Parasakthi' was released today.
— P. Chidambaram (@PChidambaram_IN) October 21, 2017












Click it and Unblock the Notifications