ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து பேனர் வைத்த வழக்கறிஞருக்கு 7 நாள் ஜெயில்!
கடலூர்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து பேனர் வைத்த வழக்கில், வழக்கறிஞர் ஒருவருக்கு 7 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிகோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்கா ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

இதையடுத்து அ.தி.மு.கவினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினார்கள். திட்டக்குடியில் அ.தி.மு.க வக்கீல் தங்க கொளஞ்சிநாதன் என்பவர் கோர்ட் முன்பு பேனர் ஒன்று வைத்தார். அதில் நீதி தோற்றது, அநீதி வென்றது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி சுரேஷ் ராஜா திட்டக்குடி கோர்ட்டில் புகார் செய்தார். இதையடுத்து வக்கீல் தங்க கொளஞ்சிநாதன் மீது நீதிபதியை விமர்சித்ததாகவும், அனுமதியின்றி பேனர் வைத்ததாகவும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதன் விசாரணை மாவட்ட குற்றவியல் நீதிபதி உத்தம ராஜா முன்பு நடந்து வந்தது. அவர் வக்கீல் தங்க கொளஞ்சி நாதனுக்கு 2 வழக்கிலும் தலா 7 நாட்கள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கும்படியும் உத்தரவிட்டார். இதையடுத்து வக்கீல் தங்ககொளஞ்சிநாதன் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications